விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பொருப்பிடையே நின்றும்*  புனல்குளித்தும்,*  ஐந்து
  நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா* - விருப்புஉடைய
  வெஃகாவே சேர்ந்தானை*  மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,* 
  அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பொருப்பு இடையே - மலைகளின் நடுவே
நின்றும் - நின்று கொண்டும்
புனல் - நீர்நிலைகளிலே
குளித்தும் - முழுகிக்கொண்டும்
ஐந்து நெருப்பு இடையே - பசுசாக்கி மத்யத்திலே

விளக்க உரை

இப்பாட்டில் விளிவருவித்துக்கொள்க. அருமையான தவங்கள் செய்து உடம்பை வருத்துகின்றவர்களே! நீங்கள் மலைமேல் ஒற்றைக்கால் விரலால் நின்றுகொண்டும், மழைகாலத்தில் நீர்நிலைகளிலே மூழ்கிக்கிடந்தும், வேனிற்காலத்திலே பஞ்சாக்நி மத்யத்தில் நின்றுகொண்டும் இப்படிப்பட்ட காயக்லேசங்களுடன் தவம்புரிவதெல்லாம் எதுக்காக? பாவங்கள் தொலைந்து நற்கதி நண்ணவேணுமென்றுதானே இங்ஙனம் தவம்புரிகின்றீர்கள், இனி அங்ஙனம் வருந்தவேண்டா, திருவெஃகா நாயனார் திருவடிகளிலே அந்நயப்ரயோஜநராயப் புஷ்பங்களைப் பணிமாறி ஆச்ரயித்தால் தீவினைகளெல்லாம் தன்னடையே ஓடிப்போய்விடுமே. நமக்காக எம்பெருமான் காயக்லேசங்கள் படாநிற்க நாமும் படாவேணுமோ? என்கிறார். பிள்ளைப்பெருமாளையங்கார் இப்பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி திருவரங்கக் கலபகத்தில் “காயிலைதின்றுங் கானிலுறைந்துங் கதிதேடித், தீயிடைநின்றும் பூவலம்வந்துந் திரிவீர்காள்! தாயிலுமன்பன் பூமகள்நண்பன் தடநாகப் பாயன் மூகுந்தன் கோயிலரங்கம் பணிவீரே“ என்றருளிய பாசுரம் நோக்கத்தக்கது.

English Translation

No need to stand on mountain taps, or in neck-deep water or in the midst of five fires and do penance. Simply worship the Lord of Venkata with fresh flowers and sincere heart All Kamas will vanish.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்