விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    களிறு முகில்குத்த*  கைஎடுத்துஓடி,* 
    ஒளிறு மருப்புஒசிகை*  யாளி பிளிறி-
    விழ,*  கொன்று நின்றுஅதிரும்*  வேங்கடமே,*  மேல்நாள் 
    குழக்கன்று*  கொண்டுஎறிந்தான் குன்று.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

களிறு - யானையானது
கை எடுத்து ஓடி - தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாயோடி
முகில் - (மதயானை போலெழுந்து) மேகங்களை
குத்த - (எதிரியானை யென்று நினைத்துக்) குத்த
யாளி - (இதைக் கண்ட) யாளியானது

விளக்க உரை

“மதயானைபோலெழுந்த மாமுகில்காள்!“ என்றும், 2. “கரியமாமுகிற் படலங்கள் கிடந்தவை முழங்கிடக்களிறென்று“ என்றும் சொல்லுகிறபடியே யானைக்கும் மேகத்திற்கும் ஒப்புமை ப்ரஸித்தம். ஆகவே, திருமலையிலுள்ள யானையானது மலைமுகட்டில் படிந்திருந்த மேகத்தை எதிரியான தொரு யானையென்று மயங்கிப் பெரிய வேகத்தோடே சென்று துதிக்கையினால் குத்த, இதனை ஒரு யாளி கண்டு ‘இக்களிற்றுக்கு இவ்வளவு மதமா‘ என்று சினந்து ஓடிவந்து அவ் யானையின்மேற் பாய்ந்து அதன் கொம்பை முறித்தெறிந்து அது வாய்விட்டு அலறிக்கொண்டு விழும்படியாகக் கொலையுஞ் செய்து, அவ்வளவிலும் சீற்றம் தணியாமையாலே அவ்விடத்திலேயே நின்று மற்றுள்ள மிருகங்களும் மண்ணுண்ணும்படியாக கர்ஜிக்கின்றதாம் திருமலையில்.

English Translation

The unworshipping rutted elephants, that run amuck raise their trunks and pierce the clouds, when gargoyles emerge with strong arms that pull out their tusks, and strike them dead as they shriek, then stand over them and roar. It is venkatam, the hill abode of the lord who threw a call against a tree.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்