விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பார்த்த கடுவன்*  சுனைநீர் நிழல்கண்டு,* 
    பேர்த்துஓர் கடுவன்எனப் பேர்ந்து,* - கார்த்த
    களங்கனிக்குக்*  கைநீட்டும் வேங்கடமே,*  மேல்நாள் 
    விளங்கனிக்குக்*  கன்றுஎறிந்தான் வெற்பு.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சுனை நீர் - திருமலைச் சுனையின் நீரிலே
பார்த்த - கவிந்து பார்த்த
கடுவன் - குரங்கானது
நிழல் கண்டு - நீரினுள்ளே பிரதி பலிக்கிற தன்னிழலைக்கண்டு
பேர்த்து ஓர் கடுவன் என - (தனக்கு எதிரியான) வேறொரு குரங்கு இருப்பதாக ப்ரமித்து

விளக்க உரை

திருமலையில் நிகழ்ச்சியைக் கூறுகின்றார். ஒருசுனையின் கரையிலே களாச்செடிகளில் களாப்பழங்களைப் பறித்துத் தின்ன தொடங்கின குரங்கானது அச்சுனை நீரை எட்டிப்பார்த்தவாறே அதில் தன் பிரதிபிம்பத்தைக்கண்டு அங்கே வேறொரு குரங்கு இருப்பதாகவும் அது களாப்பழங்களைப் பறிப்பதாகவும் பிரமித்து ‘எனக்குக் களாப்பழம் தா‘ என்று கை நீட்டுகின்றதாம், இப்படிப்பட்ட திருமலையானது, வத்ஸாஸுரனைக் கொண்டு கபித்தாஸுரனை முடித்த கண்ணபிரான் திருவுள்ளம் உவந்து வாழும் திவ்யதேசமாம். திருமலையப்பனுடைய சேஷ்டிதங்களைப் பேசுவதோடு அங்குள்ள தீர்யக்ஜந்துக்களின் சேஷ்டிதங்களைப் பேசுவதோடு வாசியில்லை ஆழ்வார்க்கு. திருமலையிலுள்ளது ஏதேனுமாம், எல்லாம் உத்தேச்யமாயிருக்கும். “எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனுமவனே“ என்றாரே ஸ்ரீ குலசேகரப் பெருமான்.

English Translation

The lord who threw a calf and felled wood-apples resides amid crystal-clear water springs, where male monkeys see their reflection and, fearing it to be a rival, cautionsly stretch their arms to pick kala fruit. It is the hill of venkatam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்