விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தெளிந்த சிலாதலத்தின்*  மேல்இருந்த மந்தி,* 
  அளிந்த கடுவனையே நோக்கி,* - விளங்கிய
  வெண்மதியம் தாஎன்னும்*  வேங்கடமே,*  மேல்ஒருநாள் 
  மண்மதியில்*  கொண்டுஉகந்தான் வாழ்வு.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மேல் ஒருநாள் - பண்டொரு காலத்தில்
மண் - பூமியை
மதியின் - தனது புத்தி சாதுரியத்தினால்
கொண்டு - (மாவலியிடத்தில் பெற்றுக்கொண்டு)
உகந்தான் - திருவுள்ள முவந்த ஸர்வேச்வான்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் கருடன் மேற்கொண்ட கரியானாய் ஸேவை தந்தருளினவன் ‘என்னைத் திருவேங்கடமலையிலே நித்யமாகக் கண்டுகொண்டிரும்‘ என்று சொல்லி மறைந்திடவே திருமலையிலே மண்டுகிறார். திருமலையின் சிகரம் சந்திரமண்டலத்தளவும் ஓங்கி யிருக்கின்றதென்ற அதிசயோக்திக்காக ஒரு வர்ணனை கூறுகின்றார். திருமலையில் கற்பாறையின்மீது பெண்குரங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றது, அதனருகில் ஆண்குரங்கும் ‘நமது பேடை நம்மை ஏவிக் காரியங்கொள்வது எப்போதோ‘ என்று அதன் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டு இராநின்றது, அதனை நோக்கிப் பெண்குரங்கானது ‘முகத்தினழகைப் பார்த்துக் கொள்வதற்குக் கண்ணாடி கொண்டுவந்து தா‘ என்பாரைப்போலே ‘பூர்ண சந்திரனைப் பறித்துத் தா‘ என்கிறதாம். இங்ஙனே சொல்லும்படியாக ஓங்கியிருந்துள்ள திருமலையே ஓங்கியுலகளந்த வுத்தமன் வாழுமிடம் என்றாராயிற்று. சிலாதலம் – வடசொல். மந்தி – பெண்குரங்கு கடுவன் –ஆண் குரங்கு. மண்மதியிற் கொண்டுகந்தான் –கேட்டான் கேட்படியே தானம் பண்ணுவதென்று விரதம்பூண்டு மஹா தார்மிகனாயிருக்கிற மாவலியினிடத்தில் யாசதத் தொழில்கொண்டே காரியம்ஸாதிக்க வேணுமென்ற நினைத்துச்சென்றது புத்தி சாதுரியமென்க.

English Translation

The Lord who rose over the worlds and took the Earth and sky resides in Venkatam where female monkeys sit on high rocks and ask their beloved male companions to leap and bring for them the bright moon.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்