விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எய்தான் மராமரம்*  ஏழும் இராமனாய்,* 
  எய்தான் அம்மான் மறியை ஏந்திழைக்குஆய்,* - எய்ததுவும்
  தென்இலங்கைக்கோன் வீழ*  சென்று குறள்உருஆய்*
  முன்நிலம் கைக்கொண்டான் முயன்று.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எய்தான் - அம்பு செலுத்தித் துளைத்தான்,
ஏந்து இழைக்கு ஆய் - தரிக்கப்பட்ட ஆபரணங்களையுடைய பிராட்டிக்காக
அ மான் மறிய - அப்படிப்பட்ட மாரீசமாயா மிருகக்குட்டியை
எய்தான் - பின்சென்றான்,
எய்த்துவும் - அம்புகளைச் செலுத்தினதும்

விளக்க உரை

‘எம்பெருமான் ஸர்வசக்தன்‘ என்று ப்ரஷித்தமாயிருக்கச் செய்தேயும் ‘இவனுக்கு சக்தியுண்டோ இல்லையோ? என்று யாரேனும் ஸந்தேகப்பட்டால் அந்த ஸ்ந்தேஹத்தைத் தீர்க்குமாறு அரிய காரியங்களை எளிதிற் செய்து காட்டுவானவன் என்பதற்காக மராமரமேழு மெய்த வரலாற்றைக் கூறுகின்றார். ஸுக்ரீவன் இராமனால் அபயப்ரதானஞ் செய்யப்பெற்ற பின்பும் மனந்தெளியாமல் வாலியின் பேராற்றலைப் பற்றிப் பலவாறு சொல்லி, வாலி மராமரங்களைத் துளைத்ததையும் துந்துபியின் உடலெலும்பை ஒரு யோஜனை தூரம் தூக்கியெறிந்த்தையுங் குறித்துப் பாராட்டிக்கூறி, இவ்வாறு போற்றலமைந்தவனை வெல்வது ஸாத்யமாகுமோ? என்று சொல்ல, அதுகேட்ட லக்ஷ்மணன் ‘உனக்கு நம்பிக்கை இல்லையாயின் இப்போது என்ன செய்ய வேண்டுவது‘ என்ன, ஸுக்ரீவன் ‘இராமபிரான் நீறுபூத்த நெருப்புப் போலத் தோன்றினும் வாலியின் வல்லமையை நீனைக்கும்போது ஸந்தேஹ முண்டாகின்றது, ஏழு மராமரங்களையும் துளைத்து இந்த துந்துபியின் எலும்பையும் இருநூறு விரற்கடை தூரம் தூக்கு யெறிந்தால் எனக்கு நம்பிக்கை யுண்டாகும்‘ என்று சொல்ல, ஸுக்ரீவனுக்கு நம்புதலுண்டாக்கும்மாறு அவனது வார்த்தைக்கு இயைந்து இராமபிரான் துந்துபின் உடலெழும்புக் குவியலைத் தனது காற்கட்டை விரலினால் இலேசாய்த் தூக்கிப் பத்து யோஜனை தூரத்துக்கு அப்பால் எறிய, அதனைக்கண்ட ஸுக்ரீவன் ‘முன்பு உலராதிருக்கையில் வாலி இதனைத் தூக்கி யெறிதல் ஒரு சிறப்பானது‘ என்று கூற, பின்பு இராமபிரான் ஒரு பாணத்தை ஏழு மராமரங்களின்மேல் ஏவ. அம்மரங்களைத் துளைதத்தோடு ஏழுலகங்களையும் துளைத்துச்சென்று மீண்டு அம்பறாத்துணியை யடைந்த தென்ற வரலாறு இங்கு அறியத்தக்கது – மராமரம் – ஆச்சரமாம். ஏத்திழைக்காய் அம்மான் மறியை எய்தான் – ‘எய்தான்‘ என்னுஞ் சொல் ‘ஏய்!‘ என்னும் வினைப்பகுதியடியகவும் ‘எய்து‘ என்னும் வினைப்பகுதியடியாகவம் தேறுவதுண்டு, முகத்தினது அம்புகளைச் செலுத்தினானென்று பொருள்படும். பிந்தினது அடைந்தானென்று பொருள்படும். இப்பாசுரத்தில் வினைபகுதியாகப் பிறந்தென்றும், இரண்டாமடியிலுள்ள எய்தானென்னும் வினைமுற்று எய்து என்னும் வினைப்பகுதியடியாகப் பிறந்ததென்றும் கொண்டு உரைக்கப்பட்டது. ‘இது மயா மிருகம்‘ என்று தனக்குத் தெரிந்திருந்தும் பிராட்டியின் கோரிக்கையைப் பின்சென்று நடக்க வேண்டிய பிரணயாதிசயத்தினால் அம்மான் குட்டியின் பின்னே நடந்தான் என்றவாறு. ‘மறி‘ என்ற சொல் சில மிருகங்களின் குட்டிக்குப் பொதுப்பெயராயும் மானுக்குச் சிறப்பஜ பெயராயு முள்ளது, இங்குக் குட்டியென்ற பொருளில் வந்தது. ‘மான் மறிய‘ என்றும் பாடமுண்டென்பர், அப்போது மாரீச மாயாமிருகம் சாகும்படி என்று பொருளாம்.

English Translation

He came to Aydhya as Rama. He felled seven treest. He killed the wonder-deer. He felled the heads of Lanka's king Ravana. It is he who come and took the Earth as a manikin.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்