- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உலகமெல்லாம் எம்பெருமானுடைய ஸங்கல்பத்தினால் ஸத்தைபெற்றுக் கிடக்கின்ற தென்கிறார். வில்விழவென்கிற வியாஜம்வைத்துக் கம்ஸனாலழைக்கப்பட்டு மதுரையில் அவனது அரன்மனையினுட் புகும்போது எதிர்பார்த்துப் போர் செய்து கொல்லவந்த குவாலயபீடமென்னும் மதயானையை மருப்பொசித்து முடித்தவனும், பூமண்டலமெல்லாம் பிரளயப்பெருங்கடலில் அழியாதபடி நிதியைக் காப்பாற்றுவதுபோல அவற்றைத் திருவயிற்றிலே வைத்துக்காப்பாற்றினவனும், இப்படி தன்னுடைமையானது ரக்ஷிக்கப்பட்டதென்ற மகிழ்ச்சி காரணத்தினால் ஆபரணம் பூண்டாற்போலேயிருக்கிற திருமேனியை யுடையவனுமான எம்பெருமானுடைய ஸங்கல்பத்தின் ஏகதேசத்திலுள்ளது இவ்வுலகமெல்லாம். அகலம் என்றசொல் ஸங்கல்பத்துக்கு வாசகமாவது எங்ஙனேயென்னில், இச்சொல் மார்பைச் சொல்லும், அதன் உட்புறமானமனத்தின் தருமமாகிய ஸங்கல்பத்தை இலக்கணையால் சொல்லுகின்றதென்க.
English Translation
The angry elephant Kuvalayapida lost his tusk and his life. Dame earth occupies a part of the Lord's chest, which sports a beautiful Tualsi-garland. The Lord takes the whole world into himself and protects if during deluge.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்