- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமானுக்கு அடியார்களிடத்திலுள்ள ப்ரீதி விச்வாஸங்களை எப்படி நாம் ஆபத்தனமாகநம்பியிருக்க வேணுமோ அப்படியே அப்பெருமான் ஆச்ரிதசத்ருக்களிடத்தில் கொண்டுள்ள சீற்றத்தையும் நாம் ஆபத்தனமாக நினைத்திருக்கவேண்டும். ‘நமக்கொருவன் பகைவனாக இருந்தால் அவனிடத்தில் எம்பெருமான் சீற்றங்கொள்வன்‘ என்று நாம் அறிந்தால் பிறகு பகைவர்க்கு நாம் அஞ்சவேண்டாவன்றோ? ஆனதுபற்றியே திருமங்கையாழ்வார் 1. “கொண்டசீற்ற மொன்றுண்டுளதறிந்து, உன்னடியனேனும் வந்தடியிணையடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!“ என்றருளிச்செய்தார். இவ்வாழ்வாரும் எம்பெருமானுடைய சீற்றத்தை சிந்திக்குமாறு தம் திருவுற்றத்திற்கு உரைக்கின்றார். இப்பாட்டில், ‘நெஞ்சே!‘ என்னும் விளி வருவித்துக் கொள்ளவேணும். எம்பெருமான் ப்ரஹலாதாழ்வான் பக்கலில் வைத்திருந்த வாத்ஸல்யத்திற்காட்டிலும் அவனுக்கு விரோதியாயிருந்த இரணியனிடத்தில் கொண்டிருந்த சீற்றமே நம்மால தியானிக்கத் தகுந்தது என்கிறார். பக்தனான ப்ரஹலாதனுடைய விரோதியைச் சீறி முடித்ததுபோலவே நம் விரோதியையும் சீறி முடித்தருள்வான் என்று தேறியிருத்தற்கு இது உறுப்பாகுமென்க. “அருளன்று நமக்கு உத்தேச்யம், ஆச்ரிதவிரோதிகள் பக்கல் அவனுக்குண்டான சினம் உத்தேச்யம், அச்சினத்தைத் தெரி அநுஸந்தி“ என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்கிகாண்க. கோவலனாய்க் கூழலூதிக்கொண்டு ஆநிரைகள் மேய்த்தவனும், சதுரனாய்க் கேசியின்வாயைக் கீண்டொழித்தவனுமான எம்பெருமான் நரசிங்கமூர்த்தியாய்த் திருவவதரித்து, சினம் – கோபத்தையுடையனாய், தெரி உகிரால் – விளங்காநின்ற நகங்களினால், இரணியனது ஆகம் கீண்டான் -, என்று வினைமுற்றாக்கி உரைத்துக் கொள்ளவுமாம்.
English Translation
The cowherd lord grazed his cows and played the flute. He is the gem-hued lord who killed the horse kesin. He took a terrible form and tore apart the chest of Hiranya with his nails. Know this anger.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்