விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னு மணிமுடிநீண்டு*  அண்டம்போய் எண்திசையும்,* 
    துன்னு பொழில்அனைத்தும் சூழ்கழலே,* - மின்னை
    உடையாகக் கொண்டு*  அன்றுஉலகுஅளந்தான்,*  குன்றம்
    குடையாக ஆகாத்த கோ.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குன்றம் குடை ஆக - கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு
ஆகாத்த கோ - பசுக்களைக் காப்பாற்றின ஸ்வாமியானவன்,
அன்று - முன்பொருகாலத்தில்,
மன்னு மணி முடி - பொருந்தின ரத்னங்களையுடைய கிரீடம்!
நீண்டு - ஓங்கி வளர்ந்து

விளக்க உரை

உலகளந்த வரலாற்றைப் பேசி யநுபவிக்கிறார். முதலடியில் ‘மன்னுமணிழடி‘ என் சொல் இரட்டுற மொழிதலால் ‘மணிமயமான கிரீடத்தையணிந்த திருமுடி‘ என்றும் பொருள் படலாம். இடையர்கள் இந்திரனுக்கிட்ட அந்த பூஜையை விலக்கித் தானே அமுது செய்ததனால் சீற்றங்கொண்டு ஆயர்க்கும் ஆநிரைக்கும் மிக்க துன்பமுண்டாம்படியாக ஏழுநாள் விடாமழை பெய்வித்தபோது கோவர்த்தன மலையையே குடையாக வெடுத்துப்பிடித்துநின்று காத்தருளின பெருமான் இப்படி ஆநிரையைத் துன்பப்படுத்தின அவ்விந்திரனுக்குப் பக்ஷபாதியாயிருந்து செய்த செயல் உலகளந்தது. அப்போது திருமுடியானது மேலுலகமெங்கும் நீண்டு செல்ல, திருவடியானது நிலவுலக மெங்கும் நிறைந்துசெல்ல, அந்தரிக்ஷலோகத்திலுள்ள மின்னல் திருமேனிக்குப் பீதாம்பரம்போல் விளங்க, இந்த நிலைமையாக உலகங்களை யளந்தா னெம்பெருமான் என்றாராயிற்று.

English Translation

Then in the yore the Lord rose and ripped through space, His jewelled crown touched the sky. his feet straddled the Earth and the eight Quarters, as he measured the Earth. He is the one who held a mount to save the cows.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்