விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பாலகனாய்*  ஆல்இலைமேல் பைய,*  உலகுஎல்லாம்
  மேல்ஒருநாள்*  உண்டவனே மெய்ம்மையே,* - மாலவனே-
  மந்தரத்தால்*  மாநீர்க் கடல்கடைந்து,*  வான்அமுதம்
  அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மேல் ஒரு நாள் - முன்னொரு காலத்தில்
பாலகன் ஆய் - சிறு குழந்தை வடிவமுடையனாகி
ஆல் இலை மேல் - ஆலந்தளிரிலே
உலகு எல்லாம் - உலகங்களையெல்லா
பைய - மெல்ல

விளக்க உரை

அநிஷ்டங்களைத் தவிர்ப்பதும் இஷ்டங்களை அளிப்பதுமாகி ரக்ஷணத்தைச் செய்யவல்லவன் எம்பெருமானே என்கிறது. இதில் மூன்னடிகளால் அநிஷ்டத்தைத் தவிர்த்தமையும் பின்னடிகளால் இஷ்டங்களை அளித்தமையும் சொல்லிற்று. பிரளயம் கொள்ளை கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றில் வைத்தது – அநிஷ்ட நிவாரணம். மந்தரத்தால் கடல்கடைந்து வானவர்க்கு அமுதளித்தது இஸ்டப்ராபணம்.

English Translation

O True Lord! In the yore you swallowed all the worlds, then slept as a child on a floating fig leaf. O Adorable Lord! You churned the ocean with a mountain and gave ambrosia to the gods in the sky.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்