விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பாற்கடலும் வேங்கடமும்*  பாம்பும் பனிவிசும்பும்,* 
  நூல்கடலும் நுண்நூல தாமரைமேல்,* - பாற்பட்டு
  இருந்தார் மனமும்*  இடமாகக் கொண்டான்,* 
  குருந்து ஒசித்த கோபாலகன்.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

குருந்து - குருந்த மாத்தை
ஒசித்த - முறித்தொழித்த
கோபாலகன் - கண்ணபிரான்
பால் கடலும் - திருப்பாற் கடலையும்
பாம்பும் - திருவனந்தாழ்வானையும்

விளக்க உரை

இப்பாட்டிலும் எம்பெருமானிருப்பிடங்களைச் சொல்லுகிறார். திருப்பாற்கடல் திருவேங்கடம் திருவனந்தாழ்வான் ஸ்ரீவைகுண்டம் வேதவேதாங்கங்கள் யோகிகளின் உள்ளக் கமலம் ஆகிய இவற்றை இருப்பிடமாகக் கொண்டவனென்றாராயிற்று. பனிவிசும்பு – ஸம்ஸாரத்தில் பட்ட தாபங்களையெல்லாம் ஆற்றிக் குளிரப்பண்ணும் பரமபதம் என்கை. நூற்கடல் – கடல் போன்றிருக்கிற ச்ருதிஸ்மிருதி இதிஹாஸம் புராணம் முதலிய சாஸ்த்ரங்கள். (நுண்ணூல தாமரையித்யாதி) என்று வேதத்திற் சொல்லப்பட்ட யாதொரு தாமரையுண்டு – ஹ்ருதயகமலம், அதிலே ஸமஸ்த கரணங்களும் ப்ரவணமாம்படி யோகத்தில் ஊன்றியிருக்கிற பரம யோகிகளுடைய மநஸ்ஸைச் சொன்னபடி. என்ற வரதராஜஸ்தவ ஸ்ரீஸூக்தி உணர்க. இனி நுண்ணூலதாமரை யித்யாதிக்கு வேறுவகையாகவும் பொருள் கூறலாம். நுட்பமான நூலையுடைத்தான் யாதொரு தாமரையுண்டு, அதன்மேல் பொருந்தியிருக்கும் பெரியபிராட்டியாருடைய, மனம் –திருமார்பு, அதாவது திருமுலைத்தடம் என்று, பெரியபிராட்டியாருடைய நெஞ்சையே கொள்ளவுமாம். தாமரை நாளத்தில் நுட்பமான நூல் இருப்பது ப்ரஸித்தம். மேற்பால் – மேலிடத்தில், மேலே என்றபடி. குருந்தொசித்த வரலாறு – கண்ணனைக் கொல்லுமாறு கம்ஸனால் ஏவப்பட்ட அஸுரர்களில் ஒருவன் ஒருநாள் கண்ணபிரான் மலர் கொய்தற்பொருட்டு விரும்பியேறும் குருந்தமாமொன்றில் பிரவேசித்து அப்பெருமான் வந்து தன்மீது ஏறும்போது தான் முறிந்துவீழ்ந்து அவனை வீழ்த்திக் கொல்லக்கருதியபோது மாயவனான கண்ணபிரான் அம்மரத்தைக் கைகளாற்பிடித்துத் தன்வலிமைகொண்டு முறித்து அழித்தன்னென்பதாம்.

English Translation

The Lord residing in Venkatam, the Lord who came as krishna and broke a kurunda tree, is still the Lord residing in the ocean, in Valikunta, in the vedas and in the hearts of truthful vedic seers.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்