- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
தண்டுழாய்மாலை யணிந்துள்ள எம்பெருமான் என் சிந்தையோடு திருவனந்தாழ்வானோடு கச்சிப்பதியோடு திருவேங்கடமலையோடு திருவெஃகாவோடு திருவேளுக்கையோடு வாசியற இவ்விடங்களில் திருவுள்ளமுவந்து வாழ்கிறனென்கிறார். எம்பெருமான் விரும்பி மேல்விழுவதற்கு உறுப்பானதம் சிந்தைக்கு, ‘சிறந்த‘ என்று அடைமொழி கொடுத்தது பொருந்தும். இப்பாசுரத்திற்கு இரண்டு மூன்று வகையாக யோஜநைகள் அருளிச் செய்வதுண்டு, பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்திற் காண்க. வெஃகா – யதோக்தகாரி ஸந்நிதி, வேளுக்கை – ‘காமாஸிகா‘ என்ற திருநாமத்தால் வழக்கப்படுகிற ஆளழகிய சிங்கப்பெருமாள் ஸந்நிதி. இவ்விரண்டு தலங்களும் கச்சிப்பதியிலுள்ளன. ‘வேளுக்கைப்பாடி‘ என்றதை இரண்டாகப்பிரித்து, வேளுக்கையும் திருவாய்ப்பாடியும் என்று பொருள் கொள்ளவும்.
English Translation
The Lord of gods who never leaves my heart and his serpent bed wears a Tulasi garland and resides in the auspicious kanchinagar, Venkatam, Venka and Velukkai, cities of joy.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்