விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வருங்கால் இருநிலனும்*  மால்விசும்பும் காற்றும்,* 
  நெருங்கு தீ*  நீர்உருவும் ஆனான்,* - பொருந்தும்
  சுடர்ஆழி ஒன்றுஉடையான்*  சூழ்கழலே,*  நாளும் 
  தொடர்ஆழி*  நெஞ்சே! தொழுது.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆழி நெஞ்சே - கம்பீரமான மனமே!
இரு நிலனும் - விசாலமான பூமியும்
மால் விசும்பும் - அளவிறந்த ஆகாசமும்
காற்றும் - வாயுவும்
நெருங்கு தீ - செறிந்த தேஜஸ்ஸும்

விளக்க உரை

எம்பெருமானுடைய திருவடிகளிலேயே என் மனம் வியாமோஹங்கொண்டிருக்கின்றதென்றார் கீழ்பாட்டில், நெஞ்சே! உனக்கு அந்த வியாமோஹம் நித்தியமாய்ச் செல்லவேணும், என்று நெஞ்சை விளித்துக் கூறுகின்றார். முன்னடிகளில் ஜகத்காரணமான பஞ்ச பூதங்களைச் சொல்லியிருப்பது லீலாவிபூதியைச் சொன்னபடி, லீலாவிபூதி நிர்வாஹகன் என்கை. மூன்றாமடியில் சுடராழியை சொல்லியிருப்பது மற்றுமுள்ள நித்யஸூரிகளுக்கெல்லாம் உபலக்ஷணமாய் நித்ய விபூதி நிர்வாஹகன் என்றபடி. ஆக, உபய விபூதிநாதனான எம்பெருமானுடைய திருவடிகளையே நெஞ்சமே! நாடோறும் தொழுது தொடர் என்றாராயிற்று. சூழ் கழல் – சூழ்ந்துக்கொள்ளும் கழல், அதாவது –அடியார்களை அகப்படுத்திக்கொள்ளும் திருவடி என்கை.

English Translation

The adorable feet, - O Heart of mine!, -of the discus-wielding Lord will soon move into his primaeval state of Earth, sky, water, fire and air. But following them with your worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்