விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வாளா ஆகிலும் காணகில்லார்*  பிறர் மக்களை மையன்மை செய்து* 
  தோளால் இட்டு அவரோடு திளைத்து*  நீ சொல்லப் படாதன செய்தாய்*
  கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி கெட்டேன்!*  வாழ்வில்லை*  நந்தன்- 
  காளாய்! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வாலா ஆகிலும் - (நீ தீம்புசெய்யாமல்) வெறுமனேயிருந்தாலும்;
காண கில்லார் - (உன்னைக்) காணவேண்டார்கள்;
நீ - நீயோவென்றால்;
பிறர் மக்களை - அயற்பெண்டுகளை;
மையன்மை செய்து - (உன்னுடைய இங்கிதாதிகளாலே) மயக்கி;

விளக்க உரை

“நந்தன் நாளாய்”” என்பது வழங்கிவரும் பாடம்; “ஸ்ரீநந்தகோபர்பிள்ளையான நீ”” என்று ஜீயருரையிற் காண்கிறபடியால் இப்பாடம் கொள்ளத்தக்கதே. மேல், “அன்றிக்கே” என்று தொடங்கி ஜீயருரையிற் காண்கிற நிர்வாஹத்துக்கேற்ப “நந்தற்கு ஆளா” என்று பாடமோதுதல் சிறக்குமென்க: ‘ஸ்வாமி பரமயோக்யர்’ என்றால் விபரீதலக்ஷணையால், ‘அயோக்யர்’ என்று பொருள்படுமாபோலே இங்கு ‘நந்தகோபருக்கு ஆள்பட்டவனே!’ என்றது விபரீதலக்ஷணையால், அவர்க்கு ஆள்படாதொழிந்தவனே!’ என்ற பொருளைத்தரும்; இத்தீமைகளைநீ செய்யத் துணியாதபடி அவர் உன்னைத் தனக்கு ஆட்படுத்திக்கொள்ளா தொழியவேயன்றோ நானிப்படி பழிகேட்டுப் பரிபவப்பட வேண்டிற்றென்ற விரிக்க: “அவர் உன்னை நியமித்து வளர்க்காமையிறே நீ இப்படி தீம்பனாய்த்தென்னுதல்” என்ற ஜீயருரைக்குக் கருத்து இதுவேயாகுமென்க. அன்றியும், ‘நந்தன் காளாய்’ என்ற பாடத்துக்கு ஓர் அநுபபத்தியுண்டு: இத்திருமொழியில் இறுதிப்பாடலொன்றொழிய மற்ற எல்லாப்பாட்டுக்களிலும் ஈற்றடியின் முதற்சீர் முதலெழுத்து மோனையின்பத்துக்கிணங்க அகரமாகவே அமைந்திருந்ததால் இப்பாட்டொன்றில் மாத்திரம் அது மாறுபடுதல் குறையுமாறு காண்க. ‘நந்தற்கு ஆளா’’ என்றே ஆன்றோர் பாடம். இப்பாடத்தில் பூர்வவியாக்கியானப் பொருத்தமும் இங்குக் காட்டப்பட்டது. ‘இச்சேரியிலுள்ள கோபாலத்தலைவர்கள் உன் மினுக்கம் பொறாதவர்களாகையால், நீ தீம்புசெய்யாமல் வெறுமனிருந்தாலும் உன்மேல் அழுக்காறு கொண்டு உன்னைக் கண்ணிலுங்காண வேண்டுகின்றிலர்; பின்னை நீ மெய்யே.கடுமையான தீமைகளை இங்ஙனே செய்யா நின்றால் அவர்கள் அலர் நூற்றக்கேட்க வேணுமோ’ என்பது முதலிரண்டடிகளின் கருத்து. [கேளார் இத்யாதி.] “மானமுடைத்து உங்களாயர் குலம்” என்றபடி மானத்தைக்காத்து வாழ்பவர்களான உன் தந்தை முதலாயினோர் ஊரலர் தூற்றுதலைக் கேட்டால் ஸஹியார்கள்; ‘இப்பாவி இப்பிள்ளையைப் பெற்றாள்’ என்று அனைவரும் என்னைப் பொடிதலால் நான் அவர்கள் கண்வட்டத்தில் வாழ்ந்திருத்தல் அரிது காண் என்கிறாள். அன்றிக்கே; [கேளார் இத்யாதி.] இடைக்குலத்துக்கு நிர்வாஹகரான நந்தகோபர்க்கு நான் இத்தீம்புகளை யறிவித்தால் அவர் ‘என் பிள்ளை பக்கலிலும் பழிசொல்லலாமோ’ என்று இவற்றைக் காதுகொடுத்துங் கேட்கிறதில்லை; இப்படித் தந்தையும் நியமியாமல் மற்றுமுள்ள சுற்றத்தாரும் நியமியாமல் இவனை மனம்போனபடி செய்யவிட்டுவைத்தால் இப்பிள்ளையைக்கொண்டு இவ்வூர் நடுவே நான் வாழ்வது எப்படி? என்கிறாளென்று முரைக்கலாம்

English Translation

Even otherwise they don’t like to see you. You infatuate others’ daughters, embrace them, play with them, and do unspeakable things. Cowherd-fold does not like to hear of such bad ways. O I am doomed, it is hopeless. O Nanda’s son! I know you now, I fear to give you suck.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்