விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மருட்டார் மென்குழற் கொண்டு பொழில் புக்கு*  வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி* 
  சுருட்டார் மென்குழற் கன்னியர் வந்து உன்னைச்*  சுற்றும் தொழ நின்ற சோதி!*
  பொருள்- தாயம் இலேன் எம்பெருமான்!*  உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு- 
  அரட்டா உன்னை அறிந்து கொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மருட்டு ஆர் - (கேட்டவர்களை) மயங்கப் பண்ணுந்திறமையுள்ள;
மெல் - மெல்லிய (த்வநியையுடைய);
குழல் கொண்டு - வேய்ங்குழலைக் கையிற் கொண்டு;
பொழில் - (ஸம்போகத்துக்கு ஏகாந்தமான) சோலைகளிலே;
புக்கு - போய்ச்சேர்ந்து;

விளக்க உரை

கண்ணபிரான் சர்வஜந மோஹநமான ஸ்வரத்தையுடைய வேய்ங்குழலையெடுத்துக்கொண்டு ஸர்சவிஹாரத்துக்குப் பாங்கான சோலைப் புறங்களிலேபோய், தான் விரும்பின பெண்களின் பேரைச்சொல்லுதலும், தன்மேல் கொண்டிருக்கும் பெண்களின் காலைக் கையைப்பிடித்துக் கொண்டு பொறுப்பித்தலும் முதலான ஒலியின் குறிப்புகள் தன்னோடு பழகும் பெண்களுணரும்படி அக்குழலை ஊதினவளவிலே, இடைச்சேரியில் தந்தம் மாமியார் முதலியோரால் காவலிலே நியமிக்கப்பட்டுள்ள பெண்கள் இக்குழலோசையைக் கேட்டுப் பரவசைகளாய் “****”” என்று-தந்தம் நியாமகர்களையும் லக்ஷியம்பண்ணாமல் கண்ணனிருப்பிடத்தேற ஓடிவந்து அவனைச் சுற்றிக்கொள்ள அதனால் அவன் விலக்ஷணமான ஒளியை முகத்திற்பெற்றானென்ற கருத்தைக்காட்டும் முதலிரண்டடி. மருட்டு-பிறவினைப் புருதியே தொழிற்பெயர் தந்தது; மயங்கப்பண்ணுதல் என்று பொருள். வாய்வைத்து-வாய்வைக்க; எச்சட்திரிபு. “அவ்வாயர்தம்பாடி” என்றவிடத்திலுள்ள அகரச்சுட்டு கன்னியர் என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது. சுருள் = சிறந்த கூந்தலுக்குச் சுருட்சி இலக்கணமென்க. தார்-பூமாலை. சுற்றுந்தொழும்படிநின்ற, சோதி-பரஞ்சோதியாகிய கண்ணபிரானே! என்று முரைக்கலாம். [பொருள்தாயமியாதி.] ‘இப்படிப்பட்ட பெருந்தீம்பனான பிள்ளையைப் பெற்றாயே பாவி’’ என்று. என்னை அனைவரும் காறுகாறென்னும்படியான நிலைமையை நான் உன்னால் பெற்றேனேயொழிய வேறொரு ஸாம்ராஜ்யமும் பெற்றேனில்லையென்கிறாள். உன்னைப் பிள்ளையாகப் பெற்ற குற்றமொழிய, உன்பொருட்டாக பந்துவர்க்கங் கெடாதபடியானேன்” என்பர்-திருவாய்மொழிப்பிள்ளை.

English Translation

You enter the groves with a slender flute and play enchantingly; Curly-locked maidens of the village come pouring out to you and worship you from all sides. O Radiant Lord, other than receiving a bad name for begetting you. I have no share in the common wealth of the village. O Wicked One! I know you now, I fear to give you suck.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்