- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமானை வாழ்த்தப் பெறுவதொரு நாள் உண்டானால், கீழ்க்கழிந்த காலமும் மேல்வருங்காலமும் எல்லாம் நன்னாளாய் விடுமென்கிறார். இன்று ஒருநாள் எம்பெருமானை வாழ்த்தப்பெற்றால் அந்த ஒருநாள் மாத்திரம் நல்ல நாளாகுமேயன்றி, கீழே பழுதே கழிந்த காலமும் இனிமேல் வரப்போகிற காலமுங்கூட நன்னாளாய் விடுமோ? என்னில், கேண்மின், ஒருவன் நெடுங்காலமாக தரித்ரனாயிருந்து ஒருநாளில் செல்வம் மிக்கவனானால், அவனுக்கு சென்ற நாட்களின் கெடுதல்கள் தோற்றமாட்டா, வயிறா உண்டபின் பசித்திருந்த முற்காலம் என் செய்யும்? அதுபொல, எம்பெருமானை வாழ்த்தப்பெறும் நான் உண்டானபின்பு, அவனை வாழ்த்தாமல் பாழே கழிந்த கீழ்நாட்களும் ‘கழிந்துபோன நாட்கள்‘ என்ற காரணத்தினாலேயே நன்னாளாய் விடுமென்க. ஒருவன் ஸந்தோஷமாயிருக்கும்போது ‘மேலுள்ள காலமெல்லாம் நாம இப்படியே ஸந்தோஷமாகவே இருப்போம்‘ என்று நினைத்திடுவனேயன்றி‘ நாளைக்கே நாம் துயரை அநுபவிக்கப்போகிறோம்‘ என்று நினைக்கமாட்டான், அதுபோல, ஆழ்வாரும் ‘எம்பெருமானை வாழ்த்தப் பெறுவத்தொருநாள் வாய்த்துவிட்டால் அந்த வாழ்த்து மேலுள்ள காலமெல்லாம் மாறாதே செல்லும்‘ என்றெண்ணி எதிர்காலமும் நன்னாளாருமென்கிறார். ஒருவனுக்கு நிகழ்காலமொன்று மாத்திரம் நன்றாயிருந்துவிட்டால் அவனுக்கு இறந்த காலமும் எதிர்காலமும் நன்றே என்க. என்றுமிறவாத வெந்தையிணையடிக்கே ஆளாய் என்வபாய்மறவாது வாழ்த்தப்பெற்றால், சென்றநாள் சொல்லாதநாள் செங்கண்மா லெங்கண்மாலென்ற அந்நாள் ஆகிய எந்நாளும் நாளாகும் என்றதாயிற்று.
English Translation
Becoming his slave, let my tongue forever praise his lotus feet without fall, saying senkanmai is our adorable Lord. Then all the days gone by, all the days of the future, and all other days will be good days.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்