- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“நன்கோதி நன்குணர்வார் –நாடோறும் பைங்கோத வண்ணன் படிகாண்பர்“ என்றாரே கீழ்ப்பாட்டில். எம்பெருமான்படியை இன்னவிதமாகக் காண்பரென்பதைக் காட்டவேண்டி இப்பாசுர்ருமளிச் செய்கிறார். இறந்த காலங்களில் நடந்த எம்பெருமானுடைய சரிதங்களெல்லாம் இன்று கண்ணெதிரே தோற்றுவதாக ஸாக்ஷாத்கரிப்பர்கள் என்று காட்டுகிறாரிப்பாட்டால். மாவலிபக்கல் மூவடிமண் நீரேற்றுப்பெற்று எம்பெருமான் பெரிய திருவுருவாகி உலகங்களை அளக்கும் போது அவனது திருமுடியானது மேலுலகங்களையெல்லாம் அதிக்ரமித்துச் சென்று அண்டங்களுக்கப்பால் விளங்கிற்று என்கிறார். இவ்விதமாகக் காண்பர்கள் என்றவாறு. வட்டம் – மண்டலம், படிவட்டம் –பூமண்டலம். எம்பெருமானுடைய ஸுகுமாரமான திருவடிபட்ட விடமென்று பூமியைத் தாமரையாக உபசரித்துச் சொல்லுகிறார். இப்பூமண்டலம் பெரிய தாமரைப்பூ மலர்ந்தாற்போலே வட்டவடிவிருப்பது பற்றியுமாம். திருவடியும் பூமண்டலத்துக்குச் சமமாகப் பரவி நின்றமையால் “அடி வட்டம்“ எனப்பட்டது.
English Translation
The Yogic Lord in the yore accepted a gift of land, then grew and strode the Earth. His crown ripped through space and extended beyond the universe.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்