விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கண்ணும் கமலம்*  கமலமே கைத்தலமும்,* 
  மண்அளந்த பாதமும் மற்றுஅவையே,*  எண்ணில்
  கருமா முகில்வண்ணன்*  கார்க்கடல் நீர்வண்ணன்,* 
  திருமா மணிவண்ணன் தேசு   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கமலம் - தாமரைப்பூப்போன்றவை
கைத் தலமும் - திருக்கைத்தலங்களும்
கமலயே - அத்தாமரைப் பூப்போன்றவையே
மண் அளந்த பரதமும் - உலகளந்த திருவடிகளும்
அவையே - அத்தாமரைப் பூப்போன்றவையே.

விளக்க உரை

கண்ணும் கைத்தமும் மண்ணளந்த பாதமும் கமலமே“ என்று ஏகவாக்கியமாகச் சொல்லியிருக்கலாமே, அங்ஙனன்றி “கண்ணுங்கமலம் கமலமே கைத்தலமும், மண்ணளந்த பாதமும் மற்றவையே“ என்று மூன்றுவாக்கியமாகச் சொல்லுவானேன்? மூன்று அவயங்களுக்கும் தாமரையொன்றே உபமாநமாகச் சொல்லப்படுகையாலே ஒரேவாக்கியமாக அமைந்தால் நன்றாயிருக்குமே என்று சிலர் நினைப்பர், ஆநந்தமாக அநுபவம் செல்லுமளவில் சொல்லிலக்கணம் சிக்ஷிக்கப்புகுமவர்கள் அரஸிகர்களாவர் வடமொழியில் ஒரு ச்லோகமுண்டு – “***“ (அதாவது – அநுபவபரீவாஹமாக ஆநந்தம் தலைமண்டைகொண்டு பேசும்போது பொருளின்பத்தில் ஆழ்ந்து அகங்குழைய வேண்டியிருக்க அதில் கரையாதே சொல்லைப் பிடித்துக்கொண்டு மன்றாடுமவர்கள் – சிருங்கார வேளி ஸமயத்தில் ‘இந்தப் புடவை என்னவிலை? எவ்வூரில் நெய்வித்தது? என்ன எடையிருக்கும்? என்று உப்புப்புளிப்பில்லாத விசாரங்கள் பண்ணுவாரைப்போலே அரஸிகர்களாவர் என்றபடி. “தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழற் கமலமன்னதாள்கண்டார் தாளேகண்டார் தடக்கைகண்டாரும்மஃதே“ என்றாற்போலே ஒவ்வொரு அவயவத்திலும் வேறொன்றறியாதே மருண்டு நிற்குமவர்களுடைய பாசுரங்களை நாமோ சிக்ஷிப்போம்? திருக்கண்ணழகிலே ஈடுபட்டுக் ‘கண்ணுங் கமலம்‘ என்றுபேசி நெடும் போது கழித்தபின் திருக்கையழகிலே கண்வைத்துக் ‘கமலமே கைத்தலமும்‘ என்றார். அதற்குப்பிறகு நெடும்போது கழித்துத் திருவடியழகிலே தோற்று ‘மண்ணளந்த பாதமும் மற்றவையே‘ என்றார் ஒருபோதும் அழகு குன்றாமலிக்கிற எம்பெருமானுடைய திவ்யாவயவத்திற்கு ஒருநொடிப்பொழுதில் அழகு மாறும்படியான தாமரையை ஒப்புச்சொல்லத்தகுமோ? தகாது தகாது, ஆனாலும் ஒப்பற்ற அவயவத்திற்கு அத்தாமரையல்லது வேறொன்றும் ஒப்பாக வாய்திறக்கவும் போராமையாலே இந்த அஸ்வாரஸ்யந் தோற்ற “பாதமும் மற்றவையே“ என்றார். “கைவண்ணந்தாமரை வாய்கமலம்போலும் கண்ணிணையுமரவிந்தம் அடியுமஃதே“ என்ற திருநெடுந்தாண்டகமும் காண்க.

English Translation

His form is the hue of the dark rain-cloud, the dark deep-ocean, the dark mountain-gem. His eyes are like lotuses. His hands are like lotuses. His Earth-measuring feet too are like lotuses. Can you imagine such a reality?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்