- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய அழகிலே தோற்ற ஆழ்வார் தம் திருவுள்ளத்தை நோக்கி ‘அவன் திருவடிகளிலே நாம் அடிமைசெய்து வாழும்படி அநுகூலிக்கப் பாராய்‘ என்கிறார். கடல் சூழ்ந்த உலகங்களையெல்லாம் அளந்தவனும், தனது பெருமேன்மைக் குறுப்பாகப் பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டிருப்பவனும், உபய விபூதி நாயகத்வமாகிற ஐச்வரியம் மிக்கவனும், தன்னழகை இவ்வளவென்று பரிச்சேதித்து நெஞ்சால் நினைத்துப் பார்க்கவும் முடியாதபடி அழகு விஞ்சியிருப்பனும், எந்த வஸ்துவோடும் ஒப்பிட்டுச் சொல்ல வொண்ணாதபடி எல்லா வஸ்துக்களுக்கும் அப்பாற்ப்பட்ட வைலக்ஷண்யத்தையுடையவனும், எப்படிப்பட்டவர்க்கும் ஸ்வயத்நத்தால் கிட்டுகைக்கு அருமையா யிருப்பவனுமான பரமபுருஷனுடைய திருவடிகளைத் தொழுவோம், வா நெஞ்சமே! என்றாராயிற்று. “எழிலளந்தும் எண்ணற்கியானை“ என்றும் “எழிலளந்தங்கு எண்ணற்கரியானை“ என்றும் பாடபேதங்கள். (அங்கு –அசைச்சொல்).
English Translation
With beauty beyond description, He is afar from all and hard to reach, He measured the ocean-girdled Earth. He rides the Garuda bird. He is the husband of Dame Wealth. Let us worship the feet, come, O Heart!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்