- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உரை:1
‘எம்பெருமானைக் கண்டேன்‘ என்று சொல்லிவிட்டால் அவனிடத்திலுள்ளவையெல்லாம் கண்டமை சொல்லப்பட்டதாக ஆகுமாயிலும், தம்முடைய மகிழ்ச்சியின் மிகுதியினால் ‘அதுகண்டேன் இதுகண்டேன்‘ என்று சிலவற்றைப் பிரித்துப் பேசுகின்றார். புருஷகாரபூதையான பிராட்டியைக் கண்டேன், அவளுடைய சேர்க்கையினாலே நிறம்பெற்ற திருமேனியைக் கண்டேன், மரதக கிரியிலே உதித்து ஒளிவிட்டுக்கிளருகிற பாலஸூர்யனைப்போலே விளங்காநிற்பதாய் இருவருடைய ஒளியும் தன்னிலே கலசி விளங்காநின்றுள்ளதான அழகியநிறத்தையும் கண்டேன், இந்தச் சேர்த்திக்கு என்னதீங்கு வருகிறதோ வென்று அஸ்தாநே பயசங்கைப்பண்ணி யுத்தஸந்நத்தனாய் கண்டார்மேலே சீறிவிழாநின்றவனாய், ச்யாமளமான அவன்வடிவுக்குப் பரபாகமாம்படி பொற்கென்ற நிறத்தையுடையனான திருவாழியாழ்வாணையுங் கண்டேன் கைத்தலத்திலிருந்துகொண்டே பெருமுழக்கத்தாலே சத்துருக்களை உயிர்மாளப்பண்ணும் ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானையும் கண்டேன் என்றாராயிற்று. நூல் இயற்றுவார் மங்கல மொழி முதலிலே வகுத்துக் கூறுவராதலால் ‘திரு‘ என்று தொடங்கினர். பொன்மேனிகண்டேன் –“ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்“ என்கிற சுருதியின்படி பொன்னின் நிறம் போன்ற நிறமுடையளான பிராட்டியின் நித்யஸம் ச்லேஷத்தாலே அப்படியே பொன்னிறமாகப் பெற்றதாம் எம்பெருமானுடைய கரிய திருமேனியும். அன்றியே, பொன்போல் விரும்பத்தக்க மேனி என்றுமாம். “உருவுகரிதாய் முகம் செய்தாய் உதய பருப்பதத்தின் மேல், விரயுங்கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே“ என்ற நாச்சியார் திருமொழிப்பாசுரம் இங்கு நினைக்கத்தகும். “புரிசங்கம் கை கண்டேன்“ என்றும் “புரிசங்கு அம் கை கண்டேன்“ என்றும் பிரிக்கலாம். புரி என்றது வலம்புரி என்றபடி. அன்றியே ஸ்புரிக்கின்ற – விளங்குகின்ற சங்கமென்றுமாம். புரி புரிந்துபார்க்கிற (எங்கே யெங்கேயென்று சுற்றுமுற்றும் சீறிப்பார்க்கிற) சங்கு என்றுமாம். சேஷத்வத்தாலே எப்போதும் வணக்கத்தையுடைய சங்கு என்றுமாம். ஈற்றடியில் எம்பெருமானை ஆழிவண்ணன் என்றது மிகப்பொருந்தும், பிராட்டி, சங்கு, கௌஸ்துபமணி முதலியவை கடலில் தோன்றினவாதலால், அப்படிப்பட்ட வஸ்துக்களை இன்று இக்கடலில் காணப்பெற்றே னென்கிறார் போலும்.
உரை:2
இவர்கள் ஏற்றிய விளக்கில், மூன்றாவது ஆழ்வார் (பேயாழ்வார்), பரம்பொருளாகிய திருமாலின் பொன் மேனியை, ஆழி என்னும் சக்ரம், மற்றும் புரிசங்கத்துடன் கண்டார் .நெருக்கத்தின் காரணம், திருமாலே என்று உணர்தனர்.
English Translation
Today I have seen the lotus-dame on the frame of my ocean-hued Lord. He wields a fiery discus and a dextral conch in his hands. He has the radiance of the golden sun.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்