விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உற்று வணங்கித்*  தொழுமின் உலகு ஏழும்*
    முற்றும் விழுங்கும் முகில் வண்ணன்,*  - பற்றிப்-
    பொருந்தாதான் மார்பு இடந்து*  பூம் பாடகத்துள்-
    இருந்தானை,*  ஏத்தும் என் நெஞ்சு.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலகு எழும் முற்றும் விழுங்கும் – உலகங்களை யெல்லாம் (பிரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனும்
முகில் வண்ணன் – மேகம் போன்ற வடிவையுடையவனும்
பொருந்தா தான் – (ப்ரஹ்லாதனுக்கு) சத்ருவான் இரணியனுடைய
பற்றி – பிடித்து

விளக்க உரை

பண்டொருகால் உலகமெல்லாம் பிரளயப்பெருங்கடலிலே அழிந்து போவதாயிருக்கையில் அவற்றையெல்லாம் திருவயிற்றிலே யெடுத்துவைத்தடக்கிக் காத்தருளின சிரமம் தீரவும், ப்ரஹ்லாதாழ்வானைப் பாதுகாத்தருளவேண்டி இரணியன் மார்பிடந்த சிரமம் தீரவும் கச்சிநகரில் திருப்பாடகமென்னுந் திருப்பதியில் இனிதாக எழுந்தருளியிருக்கு மெம்பெருமானை என்நெஞ்சு ஏத்துகின்றது, நீங்களும் அவனையே வணங்கி வாழுங்கள் என்று உலகத்தவர்க்கு உபதேசித்தாராயிற்று.

English Translation

worship with love. The cloud hued Lord who swallowed all the seven worlds, and detroyed the unrelenting Hiranya's chest, resides in the beautiful city of Padakam. I offer praise with my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்