விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கடிது கொடு நரகம்*  பிற்காலும் செய்கை,*
    கொடிது என்று அது கூடாமுன்னம்,*  - வடி சங்கம்-
    கொண்டானை*  கூந்தல் வாய் கீண்டானை,*  கொங்கை நஞ்சு-
    உண்டானை*  ஏத்துமினோ உற்று. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொடுநரகம் – க்ரூரமான நரகமானது
கடிது – கண்கொண்டு காணவொண்ணாதபடி கோரமாயிருக்கும்
பிற்காலும் – அதற்குமேலும்
செய்கை – (அங்கு யமபடர்கள் செய்யும் யாதனைச்) செயல்கள்

விளக்க உரை

உலகத்தவர்களே!, ‘நாகம்‘ என்கிற சொல் காதல் பட்டமாத்திரத்திலே ஒவ்வொருவருடைய உடலும் நடுங்கும், அதற்குமேல், அந்த நரகத்தில் யமபடர்கள் செய்கிற நலிவுகளைக் கேட்டாலோ இடிவிழுந்தாற்போலாகும். இப்படி கோரமான நரகவேதனைகட்கு இடமுண்டாவதற்கு முன்னே, விரோதி நிரஸத சீலனான எம்பெருமானுடைய தோத்திரத்திலே மூளுங்கோள் என்கிறார். கூந்தல்வாய் கீண்டானை – தலைமயிர்க்கு வாசகமான கூந்தலென்னுஞ்சொல் ‘லக்ஷிதலக்ஷணை‘ என்னும் வழியால் கேசியென்பவனைக் குறிக்கும். எங்ஙனேயென்னில், கூந்தல் என்பதற்கு வடமொழிநாமம் கேசமாகும். அச்சொல் கேசியை நினைப்பூட்டும். வில்லிப்புத்தூரார் பாரதத்தில் புத்திஸேதனைச் சொல்லவேண்டுமிடத்து, ‘திங்கள் சேர் பெயரினான்“ என்றதுகாண்க. (திங்கள் – சந்திரன், தமிழில் மதி என்னுஞ்சொல்லும் சந்திரனைச் சொல்லும், ‘மதி‘ என்கிற அச்சொல் வடமொழியாய்க்கொண்டு புத்தியென்னும் பொருள் தரும். ஆகவே, புத்திஸேநன் என்ற பெயர் திங்கள் சேர் பெயராயிற்று, இங்ஙனே தமிழ்ப் பிரயோகங்கள் பலவுள) கம்ஸனுடைய ஏவுதனினால் குதிரைவடிவங்கொண்டு கண்ணபிரானைக் கொல்லவந்த கேசி யன்னுமஸுரனை வாய்பிளந்து முடித்தவரலாறு ப்ரஸித்தம்.

English Translation

The easily attainable hell is terrible, what follows hell is more terrible. So before that happens, worship the Lord who wields a conch, who killed the horse kesin, and who drank the ogress poison breast, with love.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்