விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பகல் கண்டேன்*  நாரணனைக் கண்டேன்,*  - கனவில்-
  மிகக் கண்டேன்*  மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன்* 
  ஊன் திகழும் நேமி*  ஒளி திகழும் சேவடியான்,*
  வான் திகழும் சோதி வடிவு.         

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நாரணனை கண்டேன் – ஸ்ரீமந் நாராயணனாகிற என்று மஸ்தமியாத ஆதிதயனைக்கண்டேன்,
மீண்டு – இன்னமும்,
கணவில் – மாநஸஸாக்ஷாத் காரத்திற் காட்டிலும்
மிக மெய்யே – மிகவும் ப்ரத்யக்ஷமாக
ஊன் திகழும் நேமி – திருமேனியில் விளங்குகின்ற திருவாழியையுடையவனும்

விளக்க உரை

எம்பெருமானுடைய ஸாக்ஷாத்காரம் தமக்கு வாய்த்த படியை வாயாரப் பேசுகிறார். இந்த ஸம்ஸாரத்தில் முப்பது நாழகைக்கு ஒருமுறை இராப்பொழுதும் பகற்பொழுதும் மாறி மாறி வந்தாலும் எம்பெருமானுடைய ஸேவை கிடைக்கப்பெறாத காலத்தைக் காளராத்திரியாகவே ஞானிகள் கருதுவர்கள். ஸூரியன் விளங்குங்காலம் பகற்பொழுது என்றும், அங்ஙனல்லாத காலம் இராப்பொழுதென்றும் ஸாமாந்யர்கள் நினைத்திருப்பர்களாயினும், விஷேச ஞானிகள் அங்ஙனம் நினைத்திரார்கள். பகவத் ஸேவை வாய்க்குங்காலம் எதுவோ, அதுவே பகல், மற்றது இரவு - என்பதை இவர்களது ஸித்தாந்தம். அதனை அடியொற்று ஆழ்வார் “பகற் கண்டேன்“ என்கிறார். எம்பெருமானை ஸேவிக்கப் பெற்றேன் என்பது இதன் கருத்து. இக்கருத்தை பிறர் தெரிந்து கொள்ளுதல் அதிதாகையாலே தாமே இதனை விவரணஞ் செய்தருள வேண்டி “நாரணனைக் கண்டேன்“ என்கிறார். இவ்விடத்தில் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானவருளிச் செயல்காண்மின் - “(பகற்கண்டேன் தாளராத்ரியாய்ச் செல்லாதே விடியக்கண்டேன் வடுகர் வார்த்தைபோலே தெரிகிறதில்லை, எங்களுக்குத் தெரியும்படி சொல்லீரென்ன, (நாரணனைக் கண்டேன்) அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன்.

English Translation

I have seen the light of day, I have seen Narayana, First I saw him in my dream state. Then I saw him in reality. He wields a conch, his feet are lotus red, he has the radiance of the sky.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்