விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நேர்ந்தேன் அடிமை*  நினைந்தேன் அது ஒண் கமலம்,* 
  ஆர்ந்தேன் உன் சேவடிமேல் அன்பாய்,*  - ஆர்ந்த-           
  அடிக் கோலம்*  கண்டவர்க்கு என்கொலோ,*  முன்னைப்-
  படிக் கோலம் கண்ட பகல்?  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அடிமை நேர்ந்தேன் – உனது திருவடிகளில் கைங்கரியம்பண்ண நேர் பட்டேன்
ஒரு கண் மலம் அது நினைந்தேன் – அழகிய தாமரைப் பூப்போன்ற அத்திருவடிகளைச் சந்தித்தேன்
உன் சே அடிமேல் – உனது அத்திருவடிகள் விஷயத்திலே
அன்பு ஆய் ஆர்ந்தேன் – அன்பே வடிவெடுத்தவனாகப் பொருந்தினேன்
ஆர்ந்த – பரிபூர்ணமான

விளக்க உரை

எம்பெருமானுடைய திருவடிகளிலே தமக்கு அளவுகடந்த அன்பு அமைந்திருக்கும்படியை முன்னடிகளில் வெளியிட்டார். அதற்குமேல் ‘எம்பெருமானுடைய‘ திருமேனியெல்லாம் உத்தேச்யமன்றோ திருவடியை மாத்திரமே பேசுகின்றீரே, மற்ற அவயங்கள் உத்தேச்யமல்லவோ உமக்கு?‘ என்று ஒரு கேள்வி. பிறந்தாகக்கொண்டு, திருவடியின் அழகுக்குமுன்னே திருமேனியின் அழகு ஒரு பொருளாய்த் தோற்றுமோ? என்கிறார் பின்னடிகளில். ஒண்கமலம் அது நினைந்தேன் - ‘கமலம்போன்ற திருவடி‘ என்று சொல்லவேண்டுமடத்து, கமலம் என்றே சொன்னது - ரூபகாதிசயோக்தி யலங்காரமென்க. உன் சேவடிமேல் அன்பாய் ஆர்ந்தேன் - அன்பு என்று ஒரு வஸ்துவும் அதனையுடைய நான் என்று ஒரு வஸ்துவும் ஆக இரண்டு வஸ்துக்களின்றியே அன்புதானே நானாக வடிவெடுத்ததென்னப் பொருந்திவிட்டேன் என்கை

English Translation

Taking me into service, O Lord, -you gave me the love of your feet and the grace of your lotus heart, Having seen and enjoyed the fullness of your feet, will we not see again the beauty of your manikin frame of yore?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்