- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உலகளந்தருளின காலத்தில் திருவாழி திருச்சங்குகளோடு நித்யஸூரிகளுக்கு நேர்ந்த ஸம்ப்ரமத்தைப் பேசுகிறாரிதில். எம்பெருமான் மாண்குறள்படியே கொடுப்பதாக இசைந்து தாரைவார்க்கத் தொடங்கும்போது அஸுரகுருவான சுக்கிரன் தடைச் செய்யவும், பிறகு முவடிமண்ணை எம்பெருமான் அளந்து கொள்ளத் தொடங்கும்போது “என்னிதுமாயம்! என்னப்பனறிந்திலன், முன்னைய வண்ணமே கொண்டளவாய்“ என்று நமுசி வந்து தடை செய்யவும் நேர்ந்து, இவ்விரோதிகளெல்லாம் தொலைந்து எம்பெருமான் வெற்றிபெற்று உலகங்களை அளக்கப்பெற்ற ஸ்ந்தோஷ மிகுதியினால் திருச்சங்காழ்வான் இடத்திருக்கையிலிருந்துகொண்டு பகைவர் அஞ்சி நடுங்கும்படி பெருமுழக்கஞ் செய்தான். திருவாழியாழ்வான் வலத்திருக்கையிலிருந்துகொண்டு சத்துருக்கள் மண்ணுண்ணும்படி பெருஞ்சுடர் விட்டு ஜ்வலித்தான்.
English Translation
When the ocean-hued Lord-on-the-fire-spitting-venomous –serpent raised his petal-soft foot to measure the Earth, the dextrally called conch on his left blew a clarion call, while the radiant discus on his right subdued his detractors and shone like the day.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்