விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தமர் உள்ளம் தஞ்சை*  தலை அரங்கம் தண்கால்,* 
    தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை,*  - தமர் உள்ளும்-
    மாமல்லை கோவல்*  மதிள் குடந்தை என்பரே,* 
    ஏ வல்ல எந்தைக்கு இடம். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தமர் உள்ளம் – பக்தர்களுடைய ஹ்ருதயம்
தஞ்சை – தஞ்சைமாமணிக்கோயில்
தலை அரங்கம் – சிறந்ததான திருவரங்கம்
தண் கால் – திருத்தண்கால்
தமர் உள்ளும் – பக்தர்கள் தியானிக்கிற
 

விளக்க உரை

எம்பெருமான் திருவுற்ற முவந்து எழுந்தருளியிருக்குமிடங்களிற் சிலவற்றை யெடுத்துக் கூறுகின்றாரிதில். அன்பருடைய நெஞ்சகம். தஞ்சைமாமணிக்கோயில், திருப்பதிகளெல்லாவற்றினும் தலையான திருவரங்கம், திருத்தண்கால், திருமலை, திருப்பாற்கடல், திருக்கடன்மல்லை, திருக்கோவலூர், திருக்குடந்தை – என்னு மிவ்விடங்களை இங்கெடுத்தது மற்றுமுள்ள திருப்பதிகட்கும் உபலக்ஷணமென்க அன்பருடைய நெஞ்சகமே மிகவும் ஆதரணீயமா யிருத்தலால் ‘தமருள்ளம்‘ என்று முற்படக் கூறப்பட்டது. ஏவல்ல – ஏ-அம்பு, பாகவத விரோதிகளின் மீது அம்புகளைச் செலுத்த வல்ல ஸ்வாமி என்கை.

English Translation

The bow-wielder lord my father, devotee's delight, lives in Tanjaimamani koyil, Srirangam, Tiruttankal, the adorable Tirumalai, the shore temple of Kadalmallai, the walled city of kudandai, in the hearts of devotees, and in the ocean.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்