விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நின்றது ஓர் பாதம்*  நிலம் புதைப்ப நீண்ட தோள்*
  சென்று அளந்தது என்பர் திசை எல்லாம்*  - அன்று-
  கரு மாணியாய் இரந்த*  கள்வனே, உன்னைப்-
  பிரமாணித்தார்*  பெற்ற பேறு.             

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அன்று கருமாணி ஆய் – முன்பொரு காலத்திலே கரியகோலப் பிரமசாரியாய்ச் சென்று
இரந்த – (மாவலிபக்கல் மூவடிமண்) யாசித்த
கள்வனே – க்ருத்ரிமனான பெருமானே!
நின்றது ஓர் பாதம் – (பூமியை அளப்பதாக நின்ற ஒரு திருவடியானது
நிலம் – பூமண்டலத்தை

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் புகழ்ந்து பேசப்பட்ட ஆச்ரிதபாரதந்திரிய குணத்தை (அல்லது, அவதார விக்ரஹவைலக்ஷணயத்தை) உலகளந்த சரிதைமுகத்தால் அநுபவிக்கிறாரிதில். மாவிலியிடத்தில் உதகதாநம் பெறும்போது சிறிய இரண்டு திருவடிகளோடே நீ நின்றுகொண்டிருந்தாயே, அத்திருவடிகளுள் ஒரு திருவடியானது விம்மவளர்ந்து பூமிப்பரப்பு முழுவதையும் ஆக்கிரமித்து விட்டது. மேலுலகங்களை ஆக்கிரமிப்பதற்காக இரண்டாவது திருவடியை உயரத்தூக்க நினைத்திருக்கையிலே திசைகள் தோறும் விம்மவளர்ந்த திருத்தோள்களை மேலூலகப் பரப்பு முழுவதையும் ஆக்ரமித்துவிட்டன என்று சமத்காரமாகச் சொல்லுகிறார்.

English Translation

O Earth-measuring Lord! Then you came as a dark manikin and practised deceit. While your one foot covered the Earth, your long arms stretches and measured all the Quarters, Aho, the fortunate ones who saw you then!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்