விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஓர் உருவன் அல்லை*  ஒளி உருவம் நின் உருவம்,* 
    ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர்,*  ஓர் உருவம்-
    ஆதியாம் வண்ணம்*  அறிந்தார் அவர் கண்டீர்,*
    நீதியால் மண் காப்பார் நின்று.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓர் உருவம் அல்லை – (எம்பெருமானே) பரத்வமேவடியாக இருப்பவனன்று நீ,
ஒளி உருவம் – ஆச்ரித பரதந்த்ரமாய்க் கொண்டு ஒளி பெற்றிருக்கிற ஸ்வரூபம
நின் உருவம் – உனது வடியாம் (இப்படி ஆச்ரிதபாரதந்திரியமே வடியாவிருக்கிற உன்னை)
இரு நிலத்தோர் – இப்பெரிய பூமண்டலத்திலுள்ளவர்கள்
ஈர் உருவன் என்பர் – பரத்வமாகிற பெரிய வடிவை யுடையனாகச் சொல்லு கின்றனர்

விளக்க உரை

கீழ்பாட்டிற் கூறியபடி எம்பெருமான் தன்பெருமையைப் பாராமல் எளிமையையே பிரகாசப்படுத்தித் தம்மை விஷயீகரித்த நீர்மையை அநுஸந்திக்கையாலே, எம்பெருமானுக்கு ஸ்வாதத்திரியமே வடிவு என்று நினைத்திருக்கும் நினைவுதவிர்ந்து அவனுக்கு ஆச்ரித பாரதந்திரியமே வடிவு என்று அனைவரும் நினைக்க வேணு மென்கிறாரிதில். இப்பாட்டு எம்பெருமானை நோக்கிக் கூறுவதாம். விளி வருவித்துக்கொள்க நீ ஒருருவனல்லை – உனக்குப் பரத்வமே வடிவு என்று சாஸ்த்ரங்களைக்கொண்டு பலர் பேசுவர், அஃது அப்படியன்று. பரத்வத்தையே நீ வடிவாகவுடையையல்லை யென்றபடி. இதில் ஓருரு என்றது பரத்வமாகிற வடிவைக் கருதினபடி எனக்குப் பரத்வம் வடிவன்றாகில், பின்னை எது வடிவு என்கிறாயோ? ஒளியுருவம் நின்னுருவம் –இருட்டறையில் விளக்குப்போலே இவ்விருள் தருமா ஞாலத்தில் ஒளிபெற்று விளங்குமதான உனது ஸௌப்ய குணமே உனக்கு வடிவாயிருக்கும். நீ ஸ்வதந்திரனன்று, ஆச்ரிதபரதந்திரன் என்கை.

English Translation

He is not of one form, since he is light-effulgent, he manifests himself and is spoken of as pairs-of-opposites in the world. Only the one primeavel form is spoken of in the texts. Those who realise him thus are rulers of the Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்