விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வெற்பு என்று இரும் சோலை*  வேங்கடம் என்று இவ் இரண்டும்*
  நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல்,*  - நிற்பு என்று-
  உளம் கோயில்*  உள்ளம் வைத்து உள்ளினேன்,*  வெள்ளத்து-
  இளங் கோயில் கைவிடேல் என்று.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வெற்பு என்ற – (தெற்கு) திருமலை யென்னப்படுகிற
இருஞ்சோலை – திருமாலிருஞ் சோலையென்ன
வேங்கடம் – திருவேங்கடமென்ன
என்ன இவ் இரண்டும் – ஆகிய இத்திருமலை களிரண்டும்
நிற்பு என்று – நாம் உகந்து வாழுமிடமென்று

விளக்க உரை

எம்பெருமான் திருவுள்ளமுவந்து வாழுந் திருப்பதிகளில் எவர் விருப்பம் பண்ணுக்கின்றனரோ, அவர்களுடைய நெஞ்சிலே எம்பெருமான் உவந்து வந்து எழுந்தருளியிருப்பனன்றோ, அப்படியே திருமலை முதலிய திருப்பதிகளில் ஆதரம் விஞ்சப்பெற்ற இவ்வாழ்வாருடைய திருவுள்ளத்தில் எம்பெருமான் வந்து சேர்ந்து “தென்னனுயர் பொருப்புந் தெய்வவடமலையும்“ என்னப்படுகிற திருமாலிருஞ சோலைமலை திருவேங்கட மலைகளில் தான் பண்ணிப்போந்த விருப்பத்தை இவர் தம்முடைய திருவுள்ளத்திலே செய்து போருகிறபடியே ஒரு சமத்காரமாக வெளியிடுகிறார். ஸ்ரீவசநபூஷணத்தில் –“கல்லுங்கனைகடலு மென்கிறபடியே இது ஸித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும். இளங்கோயில் கைவிடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாயிருக்கும்“ என்றருளிச் செய்தது இப்பாசுரத்தை உட்கொண்டதேயாம்.

English Translation

The hill resorts of venkatam and mairumsolai are your two favoured abodes, and equally my heart too has become your abode. But pray do not leave the ocean of Milk, your temporal abode, O Lord!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்