விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நெறியார் குழல் கற்றை*  முன்நின்று பின் தாழ்ந்து,*
    அறியாது இளங் கிரி என்று எண்ணி*  - பிரியாது- 
    பூங்கொடிக்கள் வைகும்*  பொரு புனல் குன்று என்னும்*
    வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு.         

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெறியார் – திருமலை வழியிலேயே ஊன்றியிருப்பவர்களுடைய
சூழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து அறியாது – கேச பாச மானது முன்னே முளைத்துப் பின்னே தொங்கிக் கொண்டிருக்கவும் இது மநுஷ்யவ்யக்தியென்று தெரிநிது கொள்ளாமல்
இள கிரி என்று எண்ணி – இது ஒரு சிறுமலை யென்று எண்ணிக்கொண்டு
பூங்கொடிகள் – பூங்கொடிகளானவை
பிரியாது – அவ்விடம் விட்டு நீங்காமல்

விளக்க உரை

திருவேங்கடமலையை ஒரு சமத்காரம் பொலிய வருணிக்கிறார். திருமலையாத்திரையாக வருகின்ற மஹான்கள் பலர் 1. ‘வெறியார்தண்சோலைத் திருவேங்கடமலைமேல், நெறியாய் கிடக்கும் நிலையுடையேனாவேனே” என்று ஸ்ரீ குலசேகரப் பெருமாள் விரும்பினபடியே திருமலையேறும் வழியிலே மிக்க ஆதாம் வைத்து, திருமலைமேற்சென்று வாழ்வதிற்காட்டிலும் திருமலைவழியிற் கிடப்பதையே பரம உத்தேச்யமாகக்கொண்டு அவ்வழியிலே வீற்றிருந்து எம்பெருமானைச் சிந்தை செய்கின்றனர். அப்போது, மூச்சுவிடுதல் உடம்பு அசைத்தல் முதலியன ஒன்றுஞ் செய்யாதே வால்மீகி முதலிய மஹர்ஷிகளைப்போலே யோகநிலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அன்னவர்களது கூந்தல் ‘கற்றையானது முன்னின்று பின்தாழ்ந்திருப்பதைக்கண்ட பூங்கொடிகளானவை சில மனிதர்கள் வீற்றிருக்கின்றார்கள்‘ என்றும் ‘அவர்களுடைய சூழல்கற்றை தாழ்ந்திருக்கின்றது‘ என்றும் தெரிந்து கொள்ளாமல் வான்மீகிமுனிவர் மீது புற்று மூடினாற்போலே இந்த பக்தர்களின் மேலும் பூங்கொடிகள் படர்ந்திருப்பது அற்புதமானவொரு காட்சியாயமைந்தது. இப்படிப் பட்ட காட்சிக்கு இடமான திருமலையே நாம் விரும்பத்தக்க மலையாம் என்றாராயிற்று கிரி – வடசொல்.

English Translation

Austere saints sit in meditation on Venkatam hill, with their matted hair gathered into a fruit in front and falling on the nope at their back, Creeping plants climb over them as if they were hillocks. Streams come battling down the slopes It is the Lord's beloved hill.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்