விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  திறம்பாது என்நெஞ்சமே!*  செங்கண்மால் கண்டாய்,*
  அறம்பாவம் என்றுஇரண்டும் ஆவான்,*  புறம்தான்இம்-
  மண்தான்*  மறிகடல்தான் மாருதம்தான்,*  வான்தானே,-
  கண்டாய்*  கடைக்கண் பிடி.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இம்மண் தான் - இந்தப்பூமியும்
மரி கடல் தான் - அலையெறிகிற கடலும்
மாருதம் தான் - வாயுவும்
வான் - ஆகாசமும்
புறம் தான் - இவை தவிரவுள்ள மஹாந்முதலிய தத்துவங்களும்

விளக்க உரை

அந்தோ! சிலர் அநியாயமாக நரகவழி நோக்குகின்றனரே! என்று கீழ்ப்பாட்டில் உலகத்தாரைப்பற்றிக் கவலையுற்ற ஆழ்வார், இப்பாட்டில், அவர்கள் எங்ஙனே கெட்டொழிந்தாலும் ஒழிக; நெஞ்சே! நீ மாத்திரம் ஸர்வநிர்வாஹகன் அப்பெருமானொருவனேயென்று நான் சொல்லுவதில் ஒரு போதும் விப்ரதிபத்தி கொள்ளாமல் இதுவே பரமார்த்த மென்று உறுதிகொண்டிரு-என்று திருவுள்ளத்தை நோக்கி உபதேசிக்கின்றனர்.

English Translation

Evil and good are both manifestations of the Lord. The ocean is he, the wind is he, the sky is he, the space too is he. Therefore worship him to the end. Take note, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்