- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இவ்வுலகில் எல்லாருமே நற்கதி பெறுதற்கு யாதொரு தடையுமில்லை; எளிதில் அநுஸந்திக்கக்கூடிய திருவஷ்டாக்ஷரம் ஸித்தமாயிருக்கின்றது; அதைச் சொல்லுவதற்குக் கருவியான நாவும் கடவுளால் படைக்கப்பட்டிருக்கின்றது; இப்படி இம்பெருமானை ஏத்துகைக்கென்று ஏற்பட்ட நாவைக்கொண்டு எம்பெருமானை ஏத்துகைக்கென்று ஏற்பட்ட நானக் கொண்டு எம்பெருமானை ஏத்தாதே உபயோகமற்ற விஷயங்களைச் சொல்லுகைக்கு இதை கருவியாகக்கொண்டு உலகத்தார் அநர்த்தப்படுகின்றார்களே! இஃது என்ன ஆச்சரியம்! என்று ஆழ்வார் வியக்கின்றார். “நாராயணேதி சப்தோஸ்தி வாகஸ்தி வசவர்த்திநீ, ததாபி நரகே கோரே பத்ந்தீதி கிமத்புதம்,” என்ற புராண ச்லோகத்தின் பொருளை இப்பாட்டால் அநுஸந்தித்தாராயிற்று. முதலடியில் “நமோ நாரணா வென்று “ என்றே பெரும்பான்மையான நவீந பாடம் வழங்கிவரக் காண்கிறது; இப்பாடத்தில் வெண்டளை பிறழ்தலால் “நமோ நாரணாய வென்று” என்ற ப்ராசீன பாடமே கொள்ளத்தகும். இனி நவீந பாடத்தையும் பொருந்தவிடலாம்; ‘நாரணா வென்றோவாதுரைக்கும்’ என்று ஸந்தியாக்காமல் ‘ந்மோநாரணாவென்று ஓவாது ’ என்று ஸந்தியாக்குக: குற்றியலுகரத்துக்கு முன் உடம்படுமெய் வந்த்தாகக் கொள்க. ஓவாது உரைக்கும் உரை- ஸஹஸ்ரரக்ஷரீமாலா மந்த்ரத்தைச் சொல்லவேணுமானால் இடையில் மூச்சுவிடவும் முடியாதே; நெடுமுயற்சிகொண்டும் ஓய்ந்து ஓய்ந்து சொல்லவேண்டிய அருமை யுண்டு; திருவஷ்டாக்ஷரம் அப்படியன்று; இடையில் ஓய்வை அபேக்ஷியாமல் ஒரு காலே சொல்லி இளைப்பாறலாம் படியான மந்த்ரமிது. இவ்வளவு ஸுலபமான மந்த்ரம் கைப்பட்டிருக்கவும் அந்தோ! சிலர் இழக்கிறார்களே! என்ன கொடுமை!
English Translation
When a tongue is there in every mouth, when the Mantra "Nama Naayana' is there to recite, when there is the easy path of freedom from senescence, wonder how anyone can fall into the abyss of evil?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்