- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
புஷ்பத்தைக் காட்டிலும் மிகவும் ஸுகுமாரமான திருக்கையினால் முரட்டுடம்பனான இரணியனைத்தொட்டுப் பிடித்திழுத்து ஆச்ரிதர்கட்கு ப்ராப்யமான திருவடிகளின் மேலே போட்டுக்கொண்டு மார்வைப் பிளந்தொழித்த பின்பும் பிரானே! நீ உனது பற்கள் வெளித்தெரியும்படி நாவை மடித்துக்கொண்டிருந்தது ஏதுக்காக? ஆச்ரித விரோதி முடிந்துபோன பின்பும் வெகு நாழிகை வரையில் சீற்றம் மாறாதேயிருந்தது ஏன்! என்று கேட்கிறவிதன் கருத்து யாதெனில்; எம்பெருமான் ஆச்ரித விரோதிகளின்மீது கொள்ளும் கோபமே சாணகதர்க்குத் தஞ்சமாவது என்ற அர்த்தத்தை காட்டினபடியாம். திருமங்கையாழ்வாரும் “கொடியவாய் விலங்கினுயிர் மலங்கக் கொண்ட சீற்றமொன்றுண்டுளதறிந்து உன்னடியனேனும் வந்தடியிணையடைந்தேனணி பொழில் திருவரங்கத் தம்மானே!” என்றருளிச்செய்தது காண்க: அவ்விடத்து வியாக்யானத்திலே “தரித்ரனானவன் தநிகனையடையுமாபோலே ‘ சீற்றமுண்டு’ என்றாய்த்து இவர் பற்றுகிறது;... விரோதி நிரசநத்துக்குப் பரிகரமிறே சீற்றம்” என்று பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்துள்ளதும் குறிக்கொள்ளத்தக்கது. எயிறிலகவாய்மடித்ததென்? என்ற இக்கேள்விக்கு வாய்த்த உத்தரம்:- ஆச்ரிதவிரோதி விஷயதிலுண்டான இப்படிப்பட்ட அளவுகடந்த சீற்றமே உலகட்கெல்லாம் தஞ்சமென்று மற்றும்பல பக்தர்களுக்குக் காட்டுதற்காகவாம் என்பது.
English Translation
His stomach burning with anger, the mighty Hiranya came armed with a sword. O Lord of flower-like hands wielding a golden discus! You plaed him on your lap and tore into him with your nails, then dipped your mouth into his gore, and displayed your sharp brilliant teeth frighteningly. Why, your eyes shone like fire!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்