விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வான்ஆகி தீஆய்*  மறிகடல்ஆய் மாருதம்ஆய்* 
  தேன்ஆகி பால்ஆம் திருமாலே,* - ஆன்ஆய்ச்சி-
  வெண்ணெய் விழுங்க*  நிறையுமே,*  முன்ஒருநாள்-
  மண்ணை உமிழ்ந்த வயிறு?  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வான் ஆகி - ஆகாசமாகியும்
தீ ஆய் - அக்நியாகியும்
மறி கடல் ஆய் - அலையெறிகிற கடலாகியும்
மாருதம் ஆய் - காற்றாகியும்
தேன் ஆகி - தேன்போன்றும்

விளக்க உரை

உலகமுண்ட பெருவாயனான வுனக்கு ஓரிடைச்சி கடைந்து வைத்திருந்த வெண்ணெயை வாரி விழுங்கியுண்டவளவால் பசிதீர்ந்ததாகுமோ? என்றவிதன் கருத்து யாதெனில்; அவாப்தஸமஸ்தகாமனானவுனக்குப் பசி என்பதில்லை; வெண்ணெய் முதலியவற்றைக் களவு செய்து உண்டதெல்லாம் பசிநீங்கி வயிறு நிறைவதற்காகவன்று; ஆச்ரிதருடைய ஹஸ்தஸ்பர்சம் பெற்ற வஸ்துவை உட்கொண்டாலன்றித் தரிக்க முடியாமையினால் உண்டாயத்தனை என வெளியிட்டபடியாம். “வானாகி... மாருதமாய்” என்று இங்கே நான்கு பூதங்களைச் சொன்னது ஐந்தாவது பூதத்துக்கும் உபலக்ஷணம்; இத்தால், பஞ்ச பூதங்களாற் சமைந்த இவ்வண்டத்திற்குள்ளிருக்கும் பதார்த்தங்கட்கு நிர்வாஹகனானவனே! என்றதாயிற்று. தேனாகிப் பாலாந்திருமாலே! என்றது-பரமபோக்யனான உன்னை ஞனிகள் உட்கொள்ளக் கருதாநிற்க நீ வேறொரு வஸ்துவை போக்யமாக நினைத்து உட்கொள்ளுவது என்னோ? என்ற குறிப்பு.

English Translation

O Liberation Lord Tirumali you are the sky, the fire, the ocean, and the wind, you are milk. You are honey! Then in the yore you emptied yourself of the earth you ate. Was the cowherd-dame's butter sufficient to fill your golden stomach?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்