விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஊனக் குரம்பையின்*  உள்புக்கு இருள்நீக்கி,* 
  ஞானச் சுடர்கொளீஇ நாள்தோறும்,* - ஏனத்து-
  உருவாய் உலகுஇடந்த*  ஊழியான் பாதம்,*
  மருவாதார்க்கு உண்டாமோ வான்?      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இருள் நீக்கி - (நினைக்கிற அஜ்ஞாநமாகிர) இருட்டைப் போக்கி
ஞானம் - தத்வஜ்ஞாநமாகிற
சுடர் - விளக்கை
கொளீஇ - ஏற்றி
ஏனத்து உரு ஆய் - வராஹரூபியாகி

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் நரஸிம்ஹாவதார ப்ரஸ்தாவத்தினால் அவ்வவதாரத்திற்கு முந்தின வராஹாவதாரம் ஸ்மரிக்கப் பட்டதாகி அதனைப்பேசி யநுபவிக்கிறார். “ஊனக்குரம்பையினுள்புக்கு” என்றது- “தீண்டா வழும்புஞ் செந்நீருஞ் சீயு நரம்புஞ் செறிதசையும், வேண்டா நாற்றமிகு முடல்” என்று பரமஹேயமாகச் சொல்லப்பட்டும் காணப்பட்டு மிறாக்கின்ற சரீரத்தின் தோஷங்களை யெல்லாம் செவ்வையாக ஆராய்ந்து என்றபடி. இருள் நீக்கி-சரீரமே போக்யமென்று நினைக்கிற அஜ்ஞாநத்தை இங்கு இருளென்றார்; சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற்படியவே இந்த அஜ்ஞாநம் நீங்குமென்க. அஜ்ஞாநவிருள் நீங்கிற்றென்றால் ஞானச்சுடர் தன்னடையே கொழுந்துவிட்டோங்குமாதலால் அதனை இரண்டாமடியிலருளிச்செய்தார். ஆக, சரீரத்தைப்பற்றின அஜ்ஞாநம் தொலைந்து ஆத்மாவைப்பற்றின ஸத்ஜ்ஞாநம் திகழ்ந்து ஞானப்பிரானது திருவடிகளையடைந்தது வாழுமவர்கட்கே வானுலகம் எய்தலாகும்; மற்றையோர்க்கு அஃதில்லை என்றதாயிற்று. சுடர் கொளீ இ-சுடர் கொளுவி; சொல்லிசையளபெடை. உலகமெல்லா மழிந்த யுகாந்த காலத்திலும் தான் இவற்றை ஸத்தையழியாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தவன் என்னுங் காரணத்தினால் எம்பெருமானுக்க்கு ஊழியானென்று பெயராயிற்று.

English Translation

The feet of the First Lord who came as a boar and lifted the Earth are like a lamp unto the heart, lit inside the hut of the body flesh, dispelling darkness through knowledge. For those who do not contemplate him everyday, where is liberation?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்