விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நாடிலும்*  நின்அடியே நாடுவன்,*  நாள்தோறும்-
  பாடிலும்*  நின்புகழே பாடுவன்,*  சூடிலும்-
  பொன்ஆழி ஏந்தினான்*  பொன்அடியே சூடுவேற்கு,* 
  என்ஆகில் என்னே எனக்கு? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நாடிலும் - (மனத்தினால்) தேடும் போது
நின் அடியே - உனது திருவடிகளையே
நாடுவன் - தேடுவேன்;
நாள் தோறும் - எப்போதும்
பாடிலும் - வாய்விட்டு ஏதாவது சொல்லும்போதும்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “இனியார் புகுவாரெழுநரக வாசல்“ என்று கம்பீரமாக அருளிச் செய்துவிட்டாலும், உண்டியே உடையே உகந்தோடுமிம் மண்டலத்தவர்கள் திருந்தி உய்வதென்பது எளிதன்றே; அநாதி துர்வாஸநையை அற்பகாலத்தில் அகற்றப்போமோ? நரகத்துக்கு ஆளில்லாமற்போகும்படி எம்பெருமான் அருகேயுள்ள திருக்கோவலூரி லெழுந்தருளியிருக்கவும் அவனைப்பற்றாமல் நரகத்துக்கு ஆளாகும்படி ஸம்ஸாரிகள் சப்தாதி விஷயங்களிலேயே மண்டித்திரிகிறபடியைக் கண்டாராழ்வார்; தாமும் அவர்களைப்போல ஆகாதபடி தமது மநோவாகாயமென்னும் த்ரிகரணங்களும் அவ்வெம்பெருமான் விஷயத்திலேயே ஊன்றி இருக்குமாற்றை உவந்து நினைந்து ’நாட்டில் உள்ளார் இவனை பெற்றாலென்? பெறாவிடிலென்? நான் நல்லபடியே ஈடேறலானேனே!’ என்று சொல்லி தம் நிலைமைக்கு தாம் மகிழ்கிறார். “ நாடிலும் நின்னடியே நாடுவன்” என்றதானால் மநோவ்ருத்தியும், “பாடிலும் நின் புகழே பாடுவன்” என்றதனால் வாக்வ்ருத்தியும் “சூடிலும் பொன்னாலியேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு” என்றதனால் சரீரவ்ருத்தியும் சொல்லப்பட்டனவாதலால், தமது மன மொழி மெய்கள் மூன்றும் பகவத் விஷயத்திலேயே அவகாஹித்தபடியை அருளிச் செய்தாராயிற்று. ஈற்றடியில் “என் ஆகில்” என்பதற்கு- எனது கரணத்ரயமும் எம்பெருமானைப்பற்றின பின்பு நான் இங்கு இருந்தால்தான் என்ன? பரமபதத்திற்கு போனால்தா னென்ன? எல்லாம் எனக்கு ஒன்றே-என்பதாகக் கருத்துரைதலுமாம்.

English Translation

Leaving all else aside, everyday, I worship but your feet alone. I sing but your praise alone. I wear but the flowers on your radiant feet. O Lord of discus, Now what does it matter what happens to me?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்