- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமான் ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் எழுந்தருளியிருக்கிறபடிகளை நாம் அநுஸந்தித்தால் நமது இடரெல்லாம் நீங்கிவிடுமென்கிறார். அவன் திருப்பதிகளில் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் நடப்பதுமானபடிகளை நாம் சொல்ல, நாம் நின்றுமிருந்தும் கிடந்தும் நடந்தும் செய்த பாபங்களெல்லாம் தன்னடையே போகுமென்றபடி. நூற்றெட்டுத் திருப்பதிகளுள் பரம பதமும் ஒன்றாதலால் இங்கு ‘விண்ணகரும்’ என்று அத்திருநாடு கூறப்பட்டது. உப்பிலியப்பன் ஸந்நிதி யென்கிற திருவிண்ணகரைச் சொல்லுவதாகக் கொண்டால் அங்கு வீற்றிருந்த திருக்கோலமில்லையாதலால் மிடிபடும். கச்சிமாநகரிலுள்ள பரமேச்சுர விண்ணகரைச் சொல்லுவதாகக் கொள்ளினும் குறையில்லை. உலகளந்த திருக்கோலமாக ஸேவை ஸாதிக்குமிடத்தை நடந்தகோலத்திருப்பதியாக அநுஸந்திப்பதுண்டாதலால் ‘பூங்கோவல் நடந்தான்’ என்றார்.
English Translation
In Venkatam He stands; In the glorious sky. He sits; in Vehka He reclines; In the bowered city of Kovalur, he strikes, Even saying this will end our suffering.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்