விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இடர் ஆர் படுவார்?*  எழுநெஞ்சே,*  வேழம்-
    தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த,* - படம்உடைய-
    பைந்நாகப் பள்ளியான்*  பாதமே கைதொழுதும்,* 
    கொய்ந்நாகப் பூம்போது கொண்டு        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேழம் தொடர் - கஜேந்திராழ்வானை (விழுங்குவதாகத்) தொடர்ந்துவந்த
வான் - பெரிய
கொடு - (நெஞ்சில் இரக்கமின்றியே) கொடுமை பூண்ட
முதலை - முதலையை
சூழ்ந்த - (தப்பிப்போகாதபடி) எண்ணிகொன்றவனும்

விளக்க உரை

எம்பெருமான் நமக்காகச்செய்த செயல்களை நாம் அநுஸந்திபோமாகில் அவனது திருவடிகளில் அடிமைசெய்தே நிற்கவேண்டியதாகுமேயன்றி ஒரு நொடிப்பொழுதும் வெறுமனிருக்க முடியாது; நாம் அப்பெருமானை ஆச்ரயிக்கவே துக்கங்களெல்லாம் தொலைந்துபோம்; துக்கப்படுகைக்கு ஆளில்லை; ஒருகால் நமக்கு துக்கம் வந்தாலும் அது கஜேந்திராழ்வானைத் தொடர்ந்த முதலை பட்டது படும் என்றாராயிற்று. இரண்டாமடியில், சூழ்ந்த என்ற பெயரெச்சம் பள்ளியா நென்பதைக்கொண்டு முடியும். முதலையை முடித்து கஜேந்திரனைக் காத்த கதை ப்ரஸித்தம்.

English Translation

Who likes to suffer? Arise, O Heart! The Lord who rests on the serpent of a thousand hoods came to the rescue of the elephant caught in the crocodile's jaws. With fresh Punnai flowers, let us worship his feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்