- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பகவத் விஷய வாஸநையேயறியாத நாட்டார்க்கு உபதேசித்தார் கீழ்ப்பாட்டில்; அரஸிகர்களான உலகத்தவர்க்கு உபதேசிப்பதைவிட பகவத் விஷய ரஸமறிந்த நமது நெஞ்சுக்கு உபதேசிப்பது நன்று என்று கொண்ட ஆழ்வார் இப்பாட்டில் தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார். பரமைச்வர்யமாயினும் கைவல்ய மோக்ஷமாயினும் அல்லது அவ்விரண்டுமேயாயினும் உனக்குக் கிடைப்பதாயிருந்தாலும் அவற்றை நீ உதறித்தள்ளிவிட்டு நம்முடைய விரோதிகளைப் போக்கி ந்ம்மைப் பாதுகாப்பதற்காகவே எப்போதும் கையந்திருவாலியுமாயிருக்கிற எம்பெருமானை மறவாமல் அவனிடத்தில் அன்பை உறுதியாகக்கொள் என்று பால்குடிக்கக் கால்பிடிப்பாரைப்போலே தமது நெஞ்சை வேண்டுகின்றார். பிணிமூப்புக்கையகற்றி – பிணியையும் மூப்பையுஞ் சொன்னது மரணத்துக்கும் உபலஷணம்; “ஜராமரண மோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே” என்று பகவத்கீதையில் சொல்லியிருப்பது காண்க. பிறப்பதும் பிணிகளால் வருந்துவதும் கிழத்தனமடைவதும் இறப்பதுமாகிய ஸம்ஸார ஸ்வபாவங்கள் கைவல்ய நிஷ்டனுக்குக் கழிந்துபோகிறபடியால் இப்பாட்டின் முதலடியில் கைவல்ய மோக்ஷம் விவக்ஷிதம். அந்த மோக்ஷம் உனக்குக் கிடைத்தாலும் அது பகவதநுபவ ஆநந்தத்தில் மிகச் சிறிதென்றுகொண்டு அதனை விட்டுத்தொலை என்றபடி. பரமைச்வரியம் கிடைத்தாலும் அது அஸ்திரமென்று அதனையும் விட்டுதொலை என்கிறார் இரண்டாமடியில். இவ்விரண்டும் பகவானை மறப்பதற்குக் காரணமாதல்லால் அவற்றை வெறுக்கச்சொல்லுகிறாரென்க. ‘ ஆண்டாலும் ‘ என்ற உம்மையில், அவற்றில் தமக்கு விறுப்பமில்லை யென்பதும் தொனிக்கும். விடல் எதிர்மறை வினைமுற்று. ஆழி நெஞ்சமே! = இந்தப் பிரார்த்தனையை உனக்கு நான் பண்ணவேண்டியதில்லை; நீயே பகவதநுபவத்தில் ஆழ்ந்தவன்; ஆனாலும் ஏதோ சொல்லிவைத்தேன் என்பது கருத்து.
English Translation
O Heart of mine! I pray you take heed. Disease and infirmity departing. If you were to live through the four Yugas and rule the whole Earth, -even then, never cease to love the Lord who wields the discus.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்