- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கீழ்ப்பாட்டில், அவ்வெம்பெருமானைத் தவிர்த்து உயிர்களெல்லாம் தாமே தமக்கு வேண்டிய நன்மையைத் தேடவறியாது என்றருளிச்செய்த ஆழ்வார், இப்பாட்டில் அவை தமக்குவேண்டிய நன்மையைத் தேட அறியாதிருக்கையிலும் எம்பெருமானே நன்மையைத் தேடுகிறதற்குக் காரணம் இச்சராசரங்களை யெல்லாம் அப்பெருமான் பேரருள்கொண்டு தன் ஸங்கல்பத்தினால் படைத்த ரக்தஸம்பந்தமேயாகு மென்கிறார். பெற்றவனை யொழிய வளர்ப்பவரில்லை யென்றதாயிற்று. சேதநங்கள் இறகொடிந்த பக்ஷிபோல மூலப்ரக்ருதியிலேயே லயித்துக் கிடவாமல் தன்னையடைந்து உஜ்ஜீவிக்குமாறு நிர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்தினால் அப்பரமன் கரசரணாதி அவயவங்களையும், தன்னை யுணருமாறு சாஸ்தரங்களையும் கொடுத்தருளின னென்பது நூற்கொள்கை. இவையறியாத காலத்திலும் அவனே ஸ்ருஷ்டிக்கையாலே இப்போது உபாயமறிவானும் அவனே யென்று கீழ்ப்பாட்டோடே சேர்த்துப்பொருள் பெறுத்திக்கொள்க.
English Translation
The ocean-girdled Earth, the deluge-ocean sans, the Earth, the dark and beautiful ocean, the mountains, the fires, the wind, the sky, -oil these are created by the will of Tirumal, the Lord-and-lady pair.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்