- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கீழ்ப்பாட்டில், சராசரங்கள் யாவும் எம்பெருமானுடைய படைப்பு என்றார், இப்படி உலகங்களை யெல்லாம் உண்டாக்கின பின்பு தான் தூரஸ்தனாய் நின்றுவடாமல் உலகுக்கு உண்டாகின்ற களைகளைப் பிடுங்கிப் பாதுகாப்பதும் செய்கிறானென்பதை இப்பாட்டில் வெளியிடுகின்றார். இதில் தோள் என்றது திருக்கைகளை இரட்டை மருதமரத்தினிடையே தவழ்ந்து சென்றபோது கைகளைத் தரையிலே ஊன்றித் தவழ்ந்ததனால் மருதம் முறிந்ததைக் கைகளின் மே லேற்றிக் கூறினரென்க. மருதினூடுபோய் என்றது மருதமரங்களை முறித்துத் தள்ளினமையைச் சொன்னபடி. கூட்டமென்னும் பொருளதான வடசொல் கணமெனத் திரிந்தது: அநுகூலர் பிரதிகூலர் என்கிற வேறுபாடின்றி எல்லாப் பிராணிகளும் என்கை. “சூழரவப் பொங்கணையான் தோள்” என்ற சொல்லாற்றலால், பரிமளம் குளிர்த்தி முதலிய குணங்களுக்கெல்லாம் எல்லை நிலமாயிருக்கிற திருவனந்தாழ்வானாகிற படுக்கையையும் பொறாத ஸெளகுமார்யத்தையுடைய அப்பெருமான் அப்படுக்கையில் கண்வளரப்பெறாமல் இப்படி அல்லாடித்திரிவதுபற்றி வயிறெரிகின்ற இவ்வாழ்வாரது பொங்கும்பரிவு விளங்கும். பிரஜைகளைப் பாதுகாப்பதில் கருத்தூன்றியவர்கள் ஓரிடத்தில் தங்கியிருக்கப் பெறாமல் அலைந்து திரிவர்களன்றோ. இப்பாட்டில் அநுஸந்திக்கப்பட்டுள்ள சரித்திரங்களெல்லாவற்றிலும் எம்பெருமானுடைய தோள்வலிமையே தெற்றென விளங்குமென்றுகொண்டு தோளின் மேலேயே எல்லா செயலையும் ஏற்றிக் கூறினரென்க
English Translation
The pair of Murudu trees crashed, the blossoming kurundu tree fell, the seven prize bulls of Nappinnai's betrothal were killed, -by the arms that reached out into the eight Quarters when the Lord straddled the seven worlds, and the gods and Asuras trembled. He reclines on a coiled serpent.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்