விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அரிய புலன்ஐந்து அடக்கி*  ஆய்மலர்கொண்டு,*  ஆர்வம்- 
  புரிய பரிசினால் புல்கில்,* - பெரியனாய்-
  மாற்றாது*  வீற்றிருந்த மாவலிபால்,*  வண்கைநீர்- 
  ஏற்றானைக் காண்பது எளிது. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

புலன் ஐந்து - பஞ்சேந்திருயங்களையும்
அடக்கி - கட்டுப்படுத்தி,
ஆய் - ஆராயந்தெடுக்கப்பட்ட
மலர் - புஷ்பங்களை
கொண்டு - கையில் ஏந்திகொண்டு

விளக்க உரை

விஷயாந்தரங்களில் பற்றற்று அன்புடன் அவனை ஆச்ரயிகுமவர்களூக்கு அவனைக் காண்பதில் அருமையேயில்லை யென்கிறார். செவி வாய் கண் மூக்கு உடலென்கிற ஜ்ஞாநேந்திருயங்களைத்தையும் விஷயாந்தரங்களில் போகவொண்ணாதபடி அடக்கி, பகவதாராதனைக்கு உரிய நன்மலர்களைச் சேகரித்துகொண்டு மெய்யன்பு நன்கு விளங்கும்படி சென்று பணிந்தால், மாவலியின் மதமொழித்தபெருமானைக் கண்டநுபவிப்பது மிகவும் எளிதாகும்.

English Translation

Those who perform loving service, strewing freshly culled flowers, can see the feet of the Lord who look the gift of Earth from Marbali with ease.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்