விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எளிதில் இரண்டுஅடியும்*  காண்பதற்கு,*  என்உள்ளம்- 
  தெளிய தெளிந்தொழியும் செவ்வே,* - களியில்-
  பொருந்தாதவனைப்*  பொரல்உற்று,*  அரியாய்- 
  இருந்தான் திருநாமம் எண். 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

களியில் - அஹங்காரத்தாலே
பொருந்தாதவனை - அடிபணியாதிருந்த ஹிரண்யாஸீரனோடு
பொரல் உற்று - போர்செய்யத் தொடங்கி
அரி ஆய் இருந்தான் - நரசிங்கமாக அவதரித்த பெருமானுடைய
திரு நாமம் - திருநாமங்களை,

விளக்க உரை

எம்பெருமானுடைய திருநாமங்களைப் பரமபோக்யமாக நாம் வாயாரச் சொல்லவே, அப்பெருமான் ப்ரஹ்லாதாழ்வானுடைய விரோதியைத் தொலைத்துத் தன்னைக் கொடுத்தாப் பேர்லே நமக்கும் விரோதியைப் போக்கித் தன்னைத் தந்தருள்வனென்கிறார். என்னுள்ளம் என்றது அண்மைவிளி; என்னுள்ளமே! என்றபடி. நீ எம்பெருமானுடைய திருவடியிணையை ஸேவித்து அநுபவிப்பதற்கித் தெளிவுகொண்டிருந்தால் அவன் ப்ரஸந்நனாய் அருள்புரிவன்; நீ தெளிவுற்றிருக்கிறாயென்பது நன்குவிளங்குமாறு ஸ்ரீ நரசிம்ஹமூர்த்தியின் திருநாமங்களை எண்ணிக்கொண்டிரு.

English Translation

Easily the Lord will grant you the vision of his lotus feet, O Heart! He came as a man-lion intending to destroy the unrelenting Hiranya. Contemplate his name it is Mantra of eight syllables.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்