- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“வேங்கடமே அசுரர்கோன் வீழக்கண்டு உகந்தான் குன்று“ – பாகவத விரோதியான இரணியனைத் தொலைத்துப் பரமபாகவதனான ப்ரஹ்லாதனைக் காத்தருளின பெருமானந்த ஆச்ரிதபக்ஷபாத மஹாகுணத்தை வெளியிட்டுக்கொண்டு இன்றைக்கும் ஸேவைஸாதிக்குமிடம் திருமலையென்கிறார்.அத்திருவேங்கடம் எப்படிப்பட்டதென்ன அவ்விடத்துச் செய்திகளில் ஒன்றை யெடுத்துரைக்கிறாரிதில். திருமலையிற் கொல்லைகளில் (இராக்காலங்களில்) யானை பட்டி மேய, அதனைத் துரத்துவதற்காக அம்புதொடுத்தவில்லை ஒரு கையிலே கொண்ட குறவர்கள் மற்றொரு கையிலே தீவட்டியைக்கொளுத்திப் பிடித்துக்கொண்டு அதட்டிச்செல்ல, அத்தீவட்டியையும் அம்புகோத்த வில்லையும் கண்ட அக்களிறு அஞ்சி ஓடிப் போக, அகஸ்மாத்தாக ஆகாசத்தில் நின்றும் நக்ஷத்திரம் அவ்யானை பதறிசெல்லும் வழியிடையே வந்து பெருஞ்சோதியுடனே விழ, அதைக்கண்டு இது நக்ஷத்ரமென்ருணராது ‘குறவர்கள் கைத்தீவட்டியையே கீழெறிந்தார்கள்’ என்று ப்ரமித்து ‘இவ்வழியை நாம் எப்படி கடந்து செல்லவல்லோம்? ‘ என்றஞ்சித் திகைத்து நிற்குமிடமாம் அத்திருமலை.
English Translation
The great bow-wielding gypsies shoot fire-bolts to scare away the wild elephants from their plantations. Then seeing falling stars, the elephants still fear and flee. The Lord who killed the Asura Hiranya joyously resides in Venkatam, his abode in the mountains.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்