- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உலகில் சிலர் இரவும்பகலும் வேதங்களை உருச்சொல்லிக்கொண்டும் ஜபங்கள் செய்துகொண்டும் ஸந்தியாவந்தனம் முதலிய கருமங்களை அநுஷ்டித்துக்கொண்டும் போதுபோக்குகிறார்களே, இது நல்ல போதுபோக்குத்தானே. இப்படிப்பட்டவர்களுக்குப் புருஷார்த்தஸித்தியில் ஸந்தேஹமில்லையே என்று சிலர் கேட்டனர்போலும்; அவர்கட்கு உத்தரமுரைக்கின்றார்- எம்பெருமானை உள்ளீடாகக் கொள்ளாதே செய்கிற ஜபம் தவம் முவலியவை யாவும் பயனற்றனவாமென்கிறார். அந்தரங்கத்தில் பகவத்பக்தி முக்கியமாக இருக்கவேண்டும்; அஃது இன்றியே கையை மூடிக்கொண்டும் வாயை மொணமொணத்துக்கொண்டும் செய்யுமவை பிறரை ப்ரமிக்கச் செய்வதற்கு உபயோகப்படு மத்தனையேயொழிய புருஷார்த்தஸித்திக்குப் பயன்படாதென்றாராயிற்று. பண்பன்பெயரினைப் புந்தியால்சிந்தியாது= பகவந்நாமங்களின் பொருளாகிய திவ்யகுண சேஷ்டிதங்களைச் சிந்திப்பதைவிட்டு என்றபடி. ஸந்த்யா என்ற வடசொல் அந்திஎன விகாரப்பட்டது; ஸந்த்யாவந்தனத்தைச் சொன்னபடி. மனப்பூர்வமாகவல்லாமல் செய்யும் ஆபாஸரூபமான கருமங்களால் எம்பெருமானை அகன்று விடுகை பலிக்குமேயொழிய அணுகுகை பலிக்கமாட்டாது என்றாராயிற்று. அந்தரங்கர்க்கு அருகிலே மாளிகை அமைக்குமாபோலே, திருமால் தனது நாபிக்கமலத்திலே நான்முகனுக்கு இருப்பை அருளினன் என்கிறார் முதலடியில். மத்ஸ்யாவதாரம் ஹம்ஸாவதாரம் முதலியவற்றால் வேதோபதேசம் செய்தருளினமையை இரண்டாமடியிலருளிச்செய்தாரென்க
English Translation
The abode of the four-faced Brahma is the benevolent Lord's lotus navel, from where he unravels the vedas with grace, without contemplating the Lord's names with love, if one were to offer evening prayers, counting to chant, how will it serve any purpose?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்