விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  என்ஒருவர் மெய்என்பர்*  ஏழ்உலகுஉண்டு*  ஆல்இலையில்- 
  முன்ஒருவன் ஆய முகில்வண்ணா,* - நின்உருகிப்-
  பேய்த்தாய் முலைதந்தாள்*  பேர்ந்திலளால்,*  பேர்அமர்க்கண்- 
  ஆய்த்தாய்*  முலைதந்த ஆறு?  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பேர் அமர் கண் - பெரிய அந்தயுத்த பூமியில்
ஆய் தாய் - இடைத்தாயாகிய யசோதையானவள்
முலை தந்த ஆறு - முலை கொடுத்தவிதத்தை
ஒருவர் - ஞானத்தில் ஒப்பற்றவர்களான வ்யாஸபராகராதி ரிஷிகள்
மெய் என்பர் - மெய்யென்றுசொல்லாநிற்பர்கள்;

விளக்க உரை

எம்பெருமானிடத்தில் அந்தரங்கமான அன்பு பூண்டவர்களுள் தலையானவள் யசோதைப்பிராட்டி யொருத்திதான் என்று வெளியிடக்கருதிய ஆழ்வார் அதனை ஒரு சமத்காரச் சொல்லாலே வெளியிடுகிறார். கண்ணபிரான் இளங்குழவியாய் நந்தகோபர் திருமாளிகையில் சயனித்திருக்கும்போது வஞ்சகக் கஞ்சனாலேவப்பட்டுக் கொல்லவந்த பூதனையென்னும் பேய்த்தாய் மிக்கபரிவுள்ளவள் போலத் தெய்வக் குழவியையெடுத்துத் தனது விஷந்தடவின முலையைக்கொடுக்க பேதைக்குழவிபிடித்துச் சுவைத்துண்டவாறே அப்பேய்ச்சி உயிர்மாண்டுபிணமாய் விழுந்தாள்; உடனே யசோதப் பிராட்டி ஓடிவந்து குழந்தையை வாரியெடுத்தணைத்து முலைகொடுத்தாள்- என்பதாக இதிஹாஸம் சொல்லப்படுகின்றதே! இது மெய்யாயிருக்கமுடியுமா? என்கிறார். ஒருத்தி வந்து முலைகொடுத்துப் பட்டபாடு கண்ணெதிரே காணாநிற்கச் செய்தே இன்னொருத்தி கிட்டவரத்தான் முடியுமா? அஞ்சாமல் கிட்டவந்து எடுத்து முலை கொடுத்தாளென்பது ஸம்பாவிதமாகுமோ? என்கிறார். நாட்டில் இவ்வாறு வேறு எவர்களிடத்திலேனும் நாம் கண்டிருந்தால் இதை மெய்யெனக் கொள்ளலாம்; இப்படி எங்குங்காணாமையாலே இதனை எங்ஙனே மெய்யெனக் கொள்ளலாம்? என்றாலும், பூதனை கொடுத்தவிஷத்திற்கு மாற்றான அம்ருதமாகத் தனது ஸ்தந்யத்தைக் கொடுக்கவேணுமென்னும் அன்புமிகுதியினால் யசோதைசெய்த இக்காரியம் அவளுடைய பக்திபோன்ற பக்தியையுடைய மெய்யன்பர்க்கு நம்பத்தகுந்ததாயிருக்குமே யொழிய மற்றையோர்க்கு இதில் விச்வாஸம் பிறப்பது அரிதே என்றதாய்த்து. பேரமர்க்கண் – கண்ணபிரானைக் கொல்லக்கருதி அதற்காக முயன்று பேய்ச்சி இறந்த இடமாதல்பற்றி அதனைப் போர்க்கள மென்றார், “பேரமர்க்கண்” என்றதை யசோதைக்கு விசேஷணமாக்கி. அமர் – ஒன்றோடொன்று சண்டைசெய்வன போன்றிருக்கிற, பேர்—பெரிய, கண்- கண்களையுடையளான, ஆய்த்தாய்-, என்று உரைத்தலுமொன்று.

English Translation

How can any one understand the truth in this wonder? O Cloud-hued Lord who swallowed the seven worlds and slept as a child! The ogress gave her breast and fell dead, whereas the cowherd-dame Yasoda, melting for you with her warring-fish-like eyes, gave her breast and brought you up with love!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்