விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மலையால் குடைகவித்து*  மாவாய் பிளந்து,* 
    சிலையால் மராமரம்ஏழ் செற்று,* - கொலையானைப்-
    போர்க்கோடு ஒசித்தனவும்*  பூங்குருந்தம் சாய்த்தனவும்* 
    கார்க்கோடு பற்றியான் கை. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மலையால் - கோவர்த்தன கிரியைக்கொண்டு
குடை கவித்து - குடையாகப் பிடித்தும்,
மா வாய் பிளந்து - குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னும் அஸுரனுடைய வாயைப்பிளந்தும்,
சிலையால் - வில்லைக்கொண்டு
மராமரம் ஏழ் செற்று - ஸப்த ஸாலவிருக்ஷங்களை அழித்தும்,

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் திருவேங்கட மலையை அநுபவித்துப்பேசின ஆழ்வார் பிறகு திருவேங்கட முடையானையும் ஸேவித்து அவனது திருக்கைகளினழகிலே ஆழங்காற்பட்டார்; அவை மிகவும் ஸுகுமாரமாக இருந்தும் ராமகிருஷ்ணாதியவதாரங்களில் பெரிய வீரச்செயல்களையெல்லாம் சிறிதும் வருத்தமின்றிச் செய்தனவே! என்று ஈடுபட்டு, அத்திருக்கைள் இன்றைக்கும் அந்த வீரப்பாடு தோன்ற விளங்கும்படியை யாவரும் காணலாமென்கிறார். ஆக மலையால் குடைகவித்ததும் மாவாய்பிளந்ததும் மராமாமேழ் செற்றதும், யானைக்கொம்புபறித்ததும் பூங்குருந்தம் சாய்த்ததும் இத்திருக்கைகளே காண்மின் என்று பழைய வீரச்செயல்களை ஸ்மரித்து அநுஸந்தித்தாராயிற்று.

English Translation

A hill, inverted, became an umbrella to protect the cows. The Lord fore the horse kesin's jaws and pierced an arrow through seven trees, plucked a tusk of the rutted elephant, and destroyed the Kurundu trees, Such is the power in the lord-of-Venkatam's hands!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்