- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“தாம்பேகொண்டார்த்த தழும்பு- அறியுமுலகெல்லாம்” என்று கீழ்ப்பாட்டிலருளிச் செய்ததைகேட்ட எம்பெருமான் ‘நான் வெண்ணெய் திருடினதாகவும் அதனால் தழும்பு உண்டாயிருப்பதாகவும் அதனை உலகெல்லாம் அறிவதாகவும் நீர் சொல்லுவது முழுப்பொய்’ என்று சொல்ல; அதுகேட்ட ஆழ்வார் ‘பிரானே! ஒரு தழும்பாயிருந்தால் உன்னால் மறைக்கமுடியும்; உனது கையிலும் காலிலும் விரலிலுமாக உன்னுடம்பு முழுதும் ஆச்ரிதர்க்காகச்செய்த ஒவ்வொரு காரியத்தினால் தழும்பேறிக்கிடக்கிறதே!’ என்று ஸ்ரீராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் நரஸிம்ஹாவதாரத்திலுமாக நேர்ந்த தழும்புகளை யெடுத்துரைக்கின்றாரிப்பாட்டில். மூன்றாமடியில், பூங்கோதையாள் என்று பெரிய பிராட்டியாரைச் சொல்லுகிறது. அவள் எம்பெருமானுடைய திருமார்பிலே இறையுமகல கில்லாது உறையுமவளாகையாலே, அப்பெருமான் பெரிய சீற்றத்துடனே உக்ரமான நரசிங்கவுருவைக்கொண்டபோது ‘ஜகத்துக்கே பிரளயம் விளைந்திடுமோ!’ என்று அஞ்சி நடுங்கினளென்க. கடை நிலைத்தீவகமாக நின்ற வீங்கோதவண்ணர் என்றது- கை தாள் விரல் என்ற மூன்றினோடும் அந்வயிக்கத்தக்கது; கடல் வண்ணனுடைய கை , கடல்வண்ணனுடைய தாள், கடல்வண்ணனுடைய விரல் என்று. கை , தாள் விரல் என்பவற்றையே எழுவாயாகக்கொண்டு, கைகளும் கால்களும் விரல்களும் தழும்பைச் சுமந்திருக்கின்றன் என்று பொருள்கொள்ளவுமாம்.
English Translation
There was a mark on your fingers left by the Sarnga bow-string. The cart left a mark on your foot when you kicked it. When you tore apart Hiranya's chest, frightening even lotus dame Lakshmi, that let a mark on your fingers!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்