- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“கண்டு தொழுதேன்” என்னப்பெற்ற பின்பு எதிர்கால நிலைமைக்கு அஞ்ச வேண்டுவானேன்? என்னில்; தாம் இருப்பது இருள் தருமாஞாலத் திலாகையாலே 1. “விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறுமைம்புலனிவை. மண்ணுளென்னைப் பெற்றால் என் செய்யா?” என்கிறபடியே இந்த லீலா விபூதியின் ஸ்வபாவத்தை நினைத்து அஞ்சாதிருக்க முடியாதிறே. பரம பக்தனாயிருந்த ப்ரஹ்லதழ்வானையுமன்றோ ஒருகால் எதிரியாக்கிற்று இம்மண்ணுலகம் .2 . ”ஆற்றங்கரை வாழ்மரம்போ லஞ்சுகின்றேன்” என்றாரே திருமங்கையாழ்வாரும். கீழ் ஆறாம்பாட்டில் “ ஒன்று மறந்தறியேன் ஓதநீர்வண்ணனை நான்” என்றும் “அன்று கருவரங்கத்துக்கிடந்து கைதொழுதேன் கண்டேன்” என்றும் கர்ப்பவாஸகாலம் முதற்கொண்டே தாம் பகவத் விஷயப்ரவணராயிருப்பதாகச் சொல்லிக்கொண்ட இவ்வாழ்வார் இங்கே * பழுதே பலபகலும் போயினவென்று அழுவதாகச் சொல்லிக்கொள்வதேன் என்னில்; இப்பிறவிக்கு முன்னே * மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து போந்த காலங்களில் நாள்கள் பலவும் பழுதாயினவே யென்று வருந்துகிறபடி. இப்பிறவியிலும் ஆதியே பிடித்து இங்ஙனே பாசுரம் பேசி அநுபவிக்க ப்ராப்தியிருந்தும் கீழே பலநாள்கள் பாழாயினவேயென்று வருந்துவதாகக் கொள்ளவுமாம்.
English Translation
The wasted days gone by!, -I feared and wept. Then I saw the ocean-hued red-eyed Lord reclining on a serpent bed, -his feet caressed by lapping waves, -and offered worship to him.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்