- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கீழ்ப்பட்டில் “உலகளந்தமூர்த்தியுருவேமுதல்” என்றருளிச்செய்த ஆழ்வாரை நோக்கிச் சிலர் ‘கீழ்ப்பட்ட தெய்வங்களென்று உம்மால் கூறப்படுகின்ற தெய்வங்களும் தம்மைத் தொழுகின்றவகளுக்குப் பலன்களையளிக்கக்காண்கிறோமே; அவர்களது அருளைப் பலரும் பெற்று வாழ்கின்றனரன்றோ என்றுகூற, அவர்களுக்கு விடையளிக்கிறாரிப்பாட்டில். தெய்வம் தெய்வமென்று நாட்டிலே பலர் வழங்கப்படினும், படைத்தல் காத்தல் அழித்தல் என்கிற மூன்று தொழில்களுக்கும் கர்த்தாக்களாக ஏற்பட்ட ப்ரஹ்மா விஷ்ணு ருத்ரன் என்ற மூவருமே முதன்மைபெற்ற தேவர்களாவார்; அந்த த்ரிமூர்த்திகளுக்குள்ளே கடல் வண்ணனாகிய ஸ்ரீமந்நாராயணனே தலைமை பெற்றிருப்பவன். ஸகல ஜகத்காரண பூதனாய் எல்லாரிடத்திலும் வாத்ஸல்யம் நிறைந்தவனான அந்தத் திருமாலின் திருவருள் நன்மையைத் தருமேயொழிய வேறு எந்த தெய்வத்தினருளும் சாச்வதமான நன்மையை நல்கமாட்டாது; அவ்வருளைபெற நினைப்பது வீணேயாகும் என்றாராயிற்று. க்ஷூத்ர தெய்வங்களின் அருள் க்ஷூத்ர பலன்களுக்கே காரணமாவதனாலும் பரமபுருஷனுடைய பேரருள் ஒப்புயர்வற்ற அழிவில்லாத பேரின்பத்தைப் பெறுவிக்கக் காரணமாவதனாலும் ‘முதலாய நல்லானருளே நன்று, பல்லாரருளும் பழுது’ என்னத்தட்டில்லையென்க.
English Translation
The foremost among all gods are the Tirumurti, and the Ocean-hued one is the foremost among the Trimurti. Were if not the grace of the benevolent first-lord, the grace of all the gods-in-names in the world are naught but waste.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்