விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பார்மன்னர் மங்கப்*  படைதொட்டு வெம்சமத்துத்,* 
    தேர்மன்னற்குஆய்*  அன்று தேர்ஊர்ந்தான் காண்ஏடீ,*
    தேர்மன்னற்குஆய்*  அன்று தேர்ஊர்ந்தான் ஆகிலும்,* 
    தார்மன்னர் தங்கள்*  தலைமேலான் சாழலே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெம் சமத்து – வெவ்விய போர்க்களத்திலே
படைதொட்டு – பிரதிஜ்ஞைக்குமாறாக)ஆயுதமெடுத்து
தேர்மன்னற்கு – தேர்வீரனான அரிஜுனனுக்கு
ஆய் – துணையாய்(ஸராதியாகி)
தேர் ஊர்ந்தான் காண் – தேரைநடத்தினான் காண்.

விளக்க உரை

தோழீ! நீ உகக்கும் பெருமான் மெய்யனுமன்று; மேனாணிப்புடையவனுமன்று; பாரதப்போரில் ஆயுதமெடுப்பதில்லை யென்று பிரதிஜ்ஞை செய்துவைத்து ஆயுதத்தை யெடுத்தான்; அஃது எப்படியாயினுமாகுக் எல்லாருங் காணும்படி யுத்த பூமியிலேதான் தேர்ப்பாகனாய் நின்று இழிதொழிலைச் செய்தானே; இது தகுதியோ? என்ன் “ராஜாதிராஜ்! ஜா;வேஷாம்” என்கிறபடியே, அரசாக்ளென்று மார்பு நெறிந்திருப்பாரெல்லார்தலையிலும் ஏறி வீற்றிருக்கும்படியான பெருமைவாய்ந்த அப்பெருமான் பார்த்தன் தன் தேர்முன் நின்று பெருங்குணத்தை வெளியிட்டுக்கொண்டானத்தனை என்று அறியமாட்டிற்றிலையோ! என்று மற்றொருத்தி மறுமொழி கூறினாளாயிற்று.

English Translation

"Aho, Sister! Killing the haughty kings in a terrible war when the charioteered kings took up arms and fought, he served as a chariot-driver, see!". "But though he served as a chariot-driver for the charioteered kings, the victorious ones worshipped him with his feet on their heads, so tally!".

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்